பாகிஸ்தான் சியால்கோட்டில் இடம்பெற்ற மனிதாபிமானமற்ற செயலை கண்டிக்கிறோம்

டிச 04, 2021

ACJU/NGS/2021/277

2021.12.04

பாகிஸ்தான் சியால்கோட்டில் இடம்பெற்ற மனிதாபிமானமற்ற செயலை கண்டிக்கிறோம்

 

சியால்கோட்டில் தொழிற்சாலை மீது தாக்குதல் நடத்தப்பட்டு, அதன் இலங்கையைச் சேர்ந்த முகாமையாளர் மனிதாபிமானமற்ற முறையில் உயிருடன் எரிக்கப்பட்டதை நாங்கள் வன்மையாக கண்டிப்பதோடு, இதுதொடர்பாக நூற்றுக்கும் அதிகமான சந்தேகநபர்களை கைது செய்து அவசரமாக நடவடிக்கைகளை மேற்கொண்ட பாகிஸ்தானின் சட்ட அமுலாக்க அதிகாரிகளை நாம் பாராட்டுகின்றோம். இந்த கொடூரக் கொலைக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றோம்.

அத்துடன் எங்களின் கவலையையும் பிரார்த்தனைகளையும் மரணித்தவரின் குடும்பத்திற்கு தெரிவித்துக்கொள்கின்றோம்.

உலகளாவிய மக்கள் அனைவரும்; சட்டத்தை மதித்து, சமூகங்களுக்கிடையில் நிலையான சகோதரத்துவத்தை கட்டியெழுப்புவதற்கு மனிதாபிமானத்துடன் செயற்பட வேண்டும் என்பதும் எமது எதிர்கால சந்ததியினருக்கு சிறந்த முன்மாதிரிகளை விட்டுச் செல்ல வேண்டும் என்பதுமே எமது எதிர்பார்ப்பாகும்.

அஷ்ஷைக் எம். அர்கம் நூராமித்
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

Last modified onசனிக்கிழமை, 04 டிசம்பர் 2021 06:40

Leave a comment

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.