அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பொதுச் செயலாளர் அவர்களும், உதவிப் பொதுச் செயலாளர் அவர்களும் பாலஸ்தீன தூதரகத்திற்கு விஜயம்

மே 20, 2021

2021.05.20

அஸ்ஸலாமு அலைகும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு

 

இன்று அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பொதுச் செயலாளர் அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித் அவர்களும் அதன் உதவிப் பொதுச் செயலாளர் அஷ்-ஷைக் எம்.எஸ்.எம். தாஸீம் அவர்களும் பலஸ்தீன தூதரகத்திற்கு விஜயம் செய்து பலஸ்தீன மக்களுக்கு எதிராக நடைபெறும் அநியாயங்கள் தொடர்பில் இலங்கை முஸ்லிம்கள் மற்றும் பொதுமக்கள் சார்பாக தங்களது கவலையையும் வருத்தத்தையும் தெரிவித்தனர்.

இச்சந்திப்பில் நம் நாட்டு பிரதமர் கௌரவ மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இவ்விடயம் தொடர்பில் தனது கரிசனையை தெரிவித்திருப்பது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

இச்சந்திப்பின்போது பலஸ்தீன மக்களுக்கு தங்களது ஆதரவை தெரிவிக்கும் வகையில் ஒரு ஆவணம் பாலஸ்தீன தூதரகத்திற்கு வழங்கிவைக்கப்பட்டது.

இப்பிரச்சினை அவசரமாக நீங்கி, அம்மக்களுக்கு அமைதி மற்றும் பாதுகாப்பு கிடைக்க பிரார்த்திப்போம்.

 

ஊடகப் பிரிவு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

Last modified onவியாழக் கிழமை, 20 மே 2021 11:18

Related items

Leave a comment

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.