ரமழானின் இறுதிப் பகுதியில் பொறுப்புடன் நடந்து கொள்வோம்

மே 11, 2021

ACJU/NGS/2021/068

2021.05.11 (1442.09.28)



அமல்களுடைய கூலிகள் அதனுடைய இறுதியை வைத்தே அமைகின்றன. அதனடிப்படையில், ரமழான் இறுதிப் பகுதியை பிரயோசமுள்ளதாக நாம் கழிக்க வேண்டும்.


கொவிட் 19 வைரஸின் பரவலுக்கு மத்தியில் இம்முறை நாம் நோன்புகளை நோற்று, தற்போது ரமழான் மாதத்தின் இறுதிப் பகுதியை அடைந்திருக்கின்றோம். இவ்வைரஸின் தாக்கத்திலிருந்து அனைவரும் அவசரமாக இயல்பு வாழ்விற்கு திரும்ப, இப்புனித ரமழான் மாதத்தில் பிரார்த்திக்கும் அதேநேரம் பின்வரும் வழிகாட்டல்களைப் பேணி நடக்குமாறு ஜம்இய்யா அனைவரையும் வேண்டிக் கொள்கிறது.


 ரமழானின் இறுதிப் பகுதி நன்மைகளை அதிகம் ஈட்டித் தரும் பகுதியாகும். ஆகவே, இத்தினங்களில் அனைவரும் தமது இல்லங்களில் இருந்த வண்ணம் அதிகமதிகம் நல்லமல்களில் ஈடுபட வேண்டும்.


 ரமழானின் இறுதிப் பகுதியில் மஸ்ஜித்களில் செய்யப்படும் அமல்களுக்காக ஒன்றுகூடுவதை முற்றாக தவிர்த்து இது தொடர்பாக வக்ப் சபையும், முஸ்லிம் பண்பாட்டலுவல்கள் திணைக்களமும் வழங்கியிருக்கும் வழிகாட்டல்களைப் முழுமையாக பின்பற்றி நடந்து கொள்ள வேண்டும்.


 கொவிட் 19 வைரஸின் பரவல் அதிகரித்து காணப்படும் இதுபோன்ற சந்தர்ப்பங்களில் சுகாதாதர அதிகாரிகளினால் கூறப்படுகின்ற வழிகாட்டல்களை பின்பற்றுவது இஸ்லாமிய போதனை என்பதால் இவ்விடயத்தில் முஸ்லிம்கள் முன்மாதிரியுடன் நடந்துக் கொள்ள வேண்டும். அத்தியவசியத் தேவைகளுக்காக அன்றி வெளியில் செல்வதை தவிர்ந்துக் கொள்வதுடன் வெளியில் செல்லும் போது முகக்கவசம் (மாஸ்க்) அணிதல், சமூக இடைவெளியைப் பேணல் போன்ற சுகாதாரத் துறையின் வழிகாட்டல்களை தொடர்ந்தும் கடைபிடித்தல் வேண்டும்.


 ஸகாத்துல் ஃபித்;ரை நிறைவேற்றக் கடமைப்பட்டவர்கள், பெருநாள் தொழுகைக்கு முன்பு நிறைவேற்றல் வேண்டும்.


எல்லாம் வல்ல அல்லாஹுதஆலா எமது நல்லமல்களையும், நோன்பையும் பொருந்திக் கொள்வானாக. ஆமீன்.


அஷ்ஷைக் எம். அர்கம் நூராமித்
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

Leave a comment

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.