அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பொதுச் செயலாளர் தெரிவு பற்றிய உத்தியோகபூர்வ அறிவித்தல்

மார் 12, 2021

 

Ref: ACJU/PRE/2021/003

2021.03.12 (27.07.1442)அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பொதுச் செயலாளராக கடந்த பல ஆண்டுகளாக மதிப்பிற்குரிய அஷ்-ஷைக் எம்.எம்.ஏ. முபாறக் ஹஸ்ரத் (றஹிமஹுல்லாஹ்) அவர்கள் கடமையாற்றியமை நாம் அறிவோம். அவரின் வபாத்தை தொடர்ந்து ஏற்பட்ட இவ்வெற்றிடத்தை நிரப்பும் வகையில் கடந்த 2021.03.06 ஆம் திகதியன்று நடைபெற்ற அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிறைவேற்றுக் குழு கூட்டத்தில் அஷ்-ஷைக் அர்கம் நூராமித் அவர்கள் ஜம்இய்யாவின் யாப்பின் பிரகாரம் இரகசிய வாக்கெடுப்பின் மூலம் பொதுச் செயலாளராக தெரிவு செய்யப்பட்டார்கள் என்பதை சகலருக்கும் அறியத்தருகிறோம்.

வஸ்ஸலாம்.

 

அஷ்-ஷைக் எம்.ஜே. அப்துல் காலிக்
பதில் தலைவர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

Related items

Leave a comment

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.