05.06.2019 (01.10.1440)
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா விடுக்கும் பெருநாள் செய்தி
ஒரு மாத காலம் தொடராக நோன்பு நோற்று, நற்காரியங்களில் ஈடுபட்டு விட்டு இன்று பெருநாளை அடைந்திருக்கும் அனைத்து முஸ்லிம் சகோதரர்களுக்கும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா தனது ஈதுல் ஃபித்ர் பெருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றது.
கடந்த 21.04.2019 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட தீவிரவாதத்தாக்குதலை ஒட்டு மொத்த முஸ்லிம் சமூகமும் ஒரேகுரலில் கண்டித்ததையும், நிராகரித்ததையும் நாம் அறிவோம். குறித்த தீவிர வாதத்தாக்குதலின் பின்னர் இலங்கை முஸ்லிம் சமூகம் பல பிரச்சினைகளையும், சவால்களையும் எதிர்கொண்டிருக்கும் இத்தருணத்தில் சகல முஸ்லிம்களும் பொறுமையுடனும், நிதானத்துடனும் செயற்படுமாறு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வேண்டிக்கொள்கின்றது.
முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெற்று வருகின்ற சதிகளை முறியடிப்பதற்காக இத்தருணத்தில் அனைவரும் அல்லாஹ்விடம் பிரார்த்திப்போமாக. அல்லாஹு தஆலா இந்நாட்டில் இனங்களுக்கிடையே சமாதானத்தையும் அமைதியையும் ஏற்படுத்தி எம் எல்லோரினதும் நற்கிரியைகளையும் அங்கீகரித்தருள்வானாக!
தகப்பலல்லாஹு மின்னா வமின்கும்
அஷ்-ஷைக் எம்.எம்.எம். முர்ஷித்
உதவிச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா