இஸ்லாம் தீனிய்யாத் (தர்மாச்சார்ய) சான்றிதழ் பரீட்சைக்கு (2024) விண்ணப்பித்தல் சம்பந்தமாக

ஆக 27, 2024

ACJU/ARB/2024/008
2024.08.27 (1446.02.21)

 

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹு

அரபுக் கல்லூரிகளின் கௌரவ அதிபர்களுக்கு,

இலங்கைப் பரீட்சைத் திணைக்களத்தினால் நடாத்தப்படும் இஸ்லாம் தீனிய்யாத் (தர்மாச்சார்ய) பரீட்சைக்குத் தோற்றுவதற்கான விண்ணப்பங்கள் அரபுக் கல்லூரிகளிடமிருந்தும், அஹதிய்யாப் பாடசாலைகளிடமிருந்தும் கோரப்பட்டுள்ளன.

மேற்குறித்த பரீட்சைக்கான விண்ணப்பங்கள் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 09ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் கிடைக்கப் பெறக்கூடியதாக பதிவுத் தபாலில், பின்வரும் முகவரிக்கு அனுப்பப்படவேண்டும் என்பதை வினயமாய் வேண்டிக்கொள்கிறோம்.

 

விண்ணப்பங்கள் அனுப்பப்படவேண்டிய முகவரி:

Commissioner General of Examinations,
Institutional Examinations Organization Branch,
Department of Examinations.
P.O. Box: 1503,
Colombo.

 

இதற்கான விண்ணப்பப் படிவங்களையும், மேலதிக விபரங்களையும் பின்வரும் இணைப்பிலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

https://tamilguru.lk/islamic-dheeniyath-dharmacharya-exam-application-2024/

 

குறிப்பு: மேலதிக விபரங்களுக்கு அரபுக் கல்லூரிகள் விவகாரகுழுவின் ஒருங்கிணைப்பாளர் அஷ்-ஷைக் எம்.ஆர்.எம். ஹலீமுல்லாஹ் அவர்களை தொடர்பு கொள்ளவும்!  - 0777119051

 

முஃப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி
தலைவர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

அஷ்-ஷைக் எஸ்.ஏ.எம். ஜஃபர்
செயலாளர் - அரபுக் கல்லூரிகள் பிரிவு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

Leave a comment

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.