2024.08.20ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிறைவேற்றுக் குழு மற்றும் ஃபத்வாக் குழு உறுப்பினர்கள், மாக்கொல அநாதை இல்லத்தின் நிர்வாக உறுப்பினர்கள் ஆகியோரிடையிலான விஷேட சந்திப்பொன்று ஜம்இய்யாவின் தலைவர் முஃப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி அவர்களது தலைமையில் ஜம்இய்யாவின் தலைமைக் காரியாலயத்தில் நடைபெற்றது.
குறித்த சந்திப்பில், மாக்கொல அநாதை இல்லத்தின் செயற்பாடுகள் தொடர்பில் பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டதோடு அதன் அபிவிருத்தி மற்றும் எதிர்கால திட்டங்கள் தொடர்பில் ஜம்இய்யாவின் தலைவர் உட்பட நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள் பலரும் சில ஆலோசனைகளை முன்வைத்தனர்.
இதில், மாக்கொல அநாதை இல்லம் சார்பில் அல்-ஹாஜ் எஸ்.எச்.எம். மிஸ்பாஹ், அஷ்-ஷைக் எம்.சீ.எம். முழப்பர், அல்-ஹாஜ் பாக்கிர் ஸாதிக், அல்-ஹாஜ் எம்.ஐ.எப். ஹமீத் ஆகியோர் கலந்துகொண்டனர்.
மேலும், அங்கு மேற்கொள்ளப்படவேண்டிய அபிவிருத்தி மற்றும் மேம்பாட்டுப் பணிகள் குறித்து கள ஆய்வுகளில் ஈடுபடுவதற்கான குழுவொன்று நியமிக்கப்பட்டதோடு நேரடியாக அங்கு சென்று பார்வையிட்டு அறிக்கைகளை சமர்ப்பிக்குமாறும் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
இச்சந்திப்பில் ஜம்இய்யா சார்பாக தலைவர் முஃப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி, உப தலைவர்களான அஷ்-ஷைக் எச். உமர்தீன், அஷ்-ஷைக் ஏ.எல்.எம். ரிழா, உப செயலாளர்களான அஷ்-ஷைக் எம்.எஸ்.எம். தாஸீம், அஷ்-ஷைக் ஏ.சீ.எம். பாஸில் ஹுமைதி, பிரதம நிறைவேற்று அதிகாரி அஷ்-ஷைக் எம்.எச்.எம். புர்ஹான், ஃபத்வாக் குழுவின் செயலாளர் அஷ்-ஷைக் எம்.எல்.எம். இல்யாஸ், துணைச் செயலாளர் அஷ்-ஷைக் எம்.ரீ.எம். ஸல்மான், ஆய்வு மற்றும் வெளியீட்டுக் குழுவின் செயலாளர் அஷ்-ஷைக் என்.ரீ.எம். ளரீஃப், ஃபத்வாக் குழுவின் உறுப்பினர்களான அஷ்-ஷைக் மக்தூம், அஷ்-ஷைக் ஹுதைபா, அஷ்-ஷைக் அக்ரம் அபுல் ஹஸன், ஃபத்வாக் குழுவின் இணைப்பாளர் அஷ்-ஷைக் மபாஹிம், துணை இணைப்பாளர் அஷ்-ஷைக் அப்துல்லாஹ் ருஸ்னி ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.
- ACJU Media -