2024.04.02ஆம் திகதி சிரேஷ்ட சட்டத்தரணி ஷிராஸ் நூர்தீன் மற்றும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா நிறைவேற்றுக் குழுவினர் ஆகியோருக்கிடையிலான விஷேட சந்திப்பொன்று ஜம்இய்யாவின் தலைமை காரியாலயத்தில் இடம்பெற்றது.
இதில் அரபுக்கல்லூரிகளுக்கான அரபுமொழியிலான நூல்கள் மற்றும் பாடத்திட்டங்களை நாட்டிற்கு கொண்டுவருவதில் காணப்படும் சிக்கல்கள் தொடர்பில் கலந்துரையாடவே குறித்த சந்திப்பு நடைபெற்றது.
இந்த சந்திப்பில் ஜம்இய்யா சார்பில் நிறைவேற்றுக்குழு உறுப்பினர்களான அஷ்-ஷைக் கலாநிதி. ஏ.ஏ. அஹ்மத் அஸ்வர், அஷ்-ஷைக் எம்.எச்.எம். புர்ஹான், அஷ்-ஷைக் எம். ரிபாஹ் ஹஸன் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.
- ACJU Media -