2024.03.14ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா-கொழும்பு மத்திய கிளை நிர்வாகிகளுடனான சந்திப்பு ஜம்இய்யாவின் தலைமை காரியாலயத்தில் நடைபெற்றது.
இந்த சந்திப்பில் ஜம்இய்யாவின் கொழும்பு மத்திய கிளையினால் நடாத்தப்பட்டுவரும் சிறுவர்களுக்கான அல்-குர்ஆன் மத்ரஸா, பிரச்சார நடவடிக்கைகள், சகவாழ்வு மற்றும் நல்லிணக்கத்திற்கான வேலைத்திட்டங்கள், இளைஞர் விவகாரம் ஆகிய முக்கிய நான்கு விடயங்கள் தொடர்பில் விரிவான கலந்துரையாடல் இடம்பெற்றதோடு அவற்றை மேம்படுத்துவதற்கான ஆலோசனைகளும் சபையில் முன்வைக்கப்பட்டன.
குறித்த கலந்துரையாடலில் ஜம்இய்யாவின் கொழும்பு மத்திய கிளையின் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டிருந்தனர்.
இச்சந்திப்பில் ஜம்இய்யா சார்பில் தலைவர் முஃப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி, துணைத் தலைவர் அஷ்-ஷைக் எச். உமர்தீன், பிரதம நிறைவேற்று அதிகாரி அஷ்-ஷைக் எம்.எச்.எம். புர்ஹான் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.
- ACJU Media -