ஜம்இய்யாவின் உயர்கல்விக் குழுவின் வழிகாட்டலில் AUMSA வின் ஏற்பாட்டில் நடைபெற்ற பல்கலைக்கழக மாணவர்களுக்கான அந்-நஸீஹா-மார்க்க நல்லுபதேச நிகழ்ச்சிகள்

பிப் 01, 2024

2024 ஜனவரி மாதம் முழுவதும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் உயர் கல்விக் குழுவின் வழிகாட்டலில் அனைத்து பல்கலைக்கழக முஸ்லிம் மாணவர் ஒன்றியத்தின் (AUMSA) ஏற்பாட்டில் இலங்கையிலுள்ள பல்கலைக்கழகங்களில் உயர் கல்வியினை தொடரும் மாணவர்களுக்கான அந்-நஸீஹா-மார்க்க நல்லுபதேச நிகழ்ச்சிகள் ZOOM தொழிநுட்பம் வாயிலாக நடாத்தப்பட்டன.

மார்க்கப் பற்றுள்ள, ஒழுக்கமுள்ள, உயர் பண்புகளைக் கொண்ட சிறந்த கல்விச் சமூகமொன்றை உருவாக்குதல் எனும் நோக்கத்தின் அடிப்படையில் இந்நிகழ்ச்சிகள் ஒழுங்கு செய்யப்பட்டு நடத்தப்பட்டன.

  1. 01.04 - கிழக்குப் பல்கலைக்கழகம் - அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித்

 

  1. 01.05 - தென்கிழக்குப் பல்கலைக்கழகம் - அஷ்-ஷைக் நுஸ்ரத்

 

  1. 01.08 - கிழக்குப் பல்கலைக்கழகம் திருகோணமலை வளாகம் - அஷ்-ஷைக் நுஸ்ரத்

 

  1. 01.10 - சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிலையம் - அஷ்-ஷைக் .சீ.எம். பாஸில் ஹுமைதி

 

  1. 01.15 - வயம்ப பல்கலைக்கழகம் - அஷ்-ஷைக் எம். ரிபாஹ் ஹஸன்

 

  1. 01.23 - ஊவா-வெல்லஸ பல்கலைக்கழகம் - அஷ்-ஷைக் எம்.எஸ்.எம். நாழிம்

 

  1. 01.31 - பேராதெனிய பல்கலைக்கழகம் - அஷ்-ஷைக் .சீ.எம். பாஸில் ஹுமைதி

 

இந்நிகழ்ச்சிகள் யாவும் ZOOM தொழிநுட்பம் வாயிலாக நடாத்தப்பட்டதோடு Youtube மூலமாகவும் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டன.

 

- ACJU Media -

Leave a comment

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.