2023.11.16 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் ஒத்துழைப்புக்கும் ஒருங்கிணைப்புக்குமான குழுவினர் கொழும்பு பல்கலைக் கழகத்தின் சட்ட பீடத்திற்கு சிநேகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டனர்.
குறித்த விஜயத்தின்போது கொழும்பு பல்கலைக்கழக சட்ட பீடத்தின் பீடாதிபதியான பேராசிரியர். நிஷாந்த சம்பத் புஞ்சிஹேவா மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் ஜம்இய்யாவினால் வெளியிடப்பட்ட புனித அல்-குர்ஆன் விளக்கவுரை கையளிக்கப்பட்டதுடன் ஜம்இய்யாவின் ஏனைய வெளியீடுகளும் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டன.
மேலும் நாட்டில் நல்லிணக்கம், புரிந்துணர்வு ஆகியவற்றின் அவசியம் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன் அண்மையில் இஸ்லாம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட வெறுப்புப் பிரச்சாரம் தொடர்பிலும் குறித்த சந்திப்பில் கருத்துக்கள் பரிமாறப்பட்டன.
இந்த விஜயத்தில் ஜம்இய்யா சார்பில் நிறைவேற்றுக்குழு உறுப்பினரும் ஒத்துழைப்புக்கும் ஒருங்கிணைப்புக்குமான குழுவின் துணைச் செயலாளருமான அஷ்-ஷைக் எம். பாஸில் பாரூக், ஒத்துழைப்புக்கும் ஒருங்கிணைப்புக்குமான குழுவின் இணைப்பாளர் அஷ்-ஷைக் ஸல்மான் மற்றும் அதன் உறுப்பினர் அஷ்-ஷைக் இர்ஷாத் ஆகியோர் கலந்துகொண்டனர்.