பெற்றோர் உயிருடன் இருக்கும்பொழுது தங்களது பிள்ளைகளுக்கு மத்தியில் சொத்துக்களை சரிசமமாக பிரித்துக் கொடுப்பது சம்பந்தமாக

நவ 17, 2023

ACJU/FTW/2017/37-314

2017.12.29 (1439.04.09)

 

கேள்வி : ஒருவர் உயிருடன் இருக்கும் பொழுது தனது பிள்ளைகளுக்கு மத்தியில் சொத்துக்களை சரிசமமாக பிரித்து கொடுப்பது கட்டாயமாகுமா?

 

பதில் :

எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே. ஸலாத்தும் ஸலாமும் அவனது இறுதித் தூதர் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மீதும், அவர்களது கிளையார்கள், தோழர்கள் மீதும் உண்டாவதாக!


பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு சொத்துக்களைப் பிரித்துக் கொடுக்கும்; போது நீதமாக நடந்து கொள்வது முக்கியமாகும். இதைப் பின்வரும் ஹதீஸ் சுட்டிக்காட்டுகிறது.


ஆமிர் பின் ஷர்ஹபீல் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகிறார்கள்: நுஃமான் பின் பஷீர் றழியல்லாஹு அன்ஹு அவர்கள் மிம்பரின் மீது நின்று கொண்டு ஒரு முறை கூறினார்கள்:


'என் தந்தை அன்பளிப்பு ஒன்றை எனக்குக் கொடுத்தார். என் தாயார் அம்ரா பின்த் ரவாஹா றழியல்லாஹு அன்ஹா அவர்கள் என் தந்தையிடம், நீங்கள் இதற்கு அல்லாஹ்வின் தூதரை சாட்சியாக ஆக்காதவரை நான் இதை ஒப்புக் கொள்ள மாட்டேன் என்று கூறினார்கள். என் தந்தை அல்லாஹ்வின் தூதரிடம் சென்று, அல்லாஹ்வின் தூதரே! நான் அம்ரா பின்த் ரவாஹாவின் மூலமாக, எனக்குப் பிறந்த என் மகனுக்கு அன்பளிப்பு ஒன்றைக் கொடுத்தேன், அவள் (என் மனைவி) தங்களை சாட்சியாக ஆக்கும் படி எனக்கு கூறுகின்றாள் என்று கூறினார்.


அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், நீர் உமது ஏனைய பிள்ளைகளுக்கும் இதே போன்று கொடுத்தீரா? என்று கேட்டார்கள். அதற்கு என் தந்தை, இல்லை என்று பதிலளித்தார். அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், அவ்வாறெனில் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். உங்கள் பிள்ளைகளிடையே நீதி செலுத்துங்கள் என்று கூறினார்கள். இதைக் கேட்ட என் தந்தை உடனே திரும்பி வந்து, தனது அன்பளிப்பை ரத்து செய்தார். (1)

 

முஸ்லிமுடைய அறிவிப்பில் :


அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், 'அவ்வாறாயின், இதற்கு வேறு யாரையாவது சாட்சியாக்கிக் கொள்ளுங்கள்' என்று கூறிவிட்டு, 'அவர்கள் அனைவரும் உங்களுக்குச் சம அளவில் உபகாரம் செய்ய வேண்டுமென நீங்கள் எதிர்பார்க்கிறீர்களா?' என்று கேட்டார்கள். என் தந்தை 'ஆம்' என்றார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், 'அப்படியானால் இவ்வாறு செய்யாதீர்கள்' என்று கூறினார்கள். (2)

இந்த ஹதீஸை அடிப்படையாக வைத்து இமாம் அஹ்மத் றஹிமஹுல்லாஹ் மற்றும் சில அறிஞர்கள், பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு சொத்துக்களை சமமாகப் பிரித்துக் கொடுப்பது கட்டாயம் என்று கூறுகின்றனர்.


இதற்கு மாற்றமாக, இமாம்களான ஷாபிஈ, மாலிக், மற்றும் அபூ ஹனீபா றஹிமஹுமுல்லாஹ் ஆகிய பெரும்பான்மையான அறிஞர்கள், பெற்றோர்கள் பிள்ளைகளுக்குச் சொத்துக்களை சமமாகப் பிரித்துக் கொடுப்பது கட்டாயமில்லை, ஆனால் அவ்வாறு சமமற்ற முறையில் கொடுப்பது மக்ரூஹ் என்று கூறுகின்றனர். (3)


இதற்கு ஆதாரமாக, அவர்கள் மேற்குறித்த ஹதீஸில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் 'இதற்கு வோறொருவரை சாட்சியாக வைத்துக் கொள்ளுங்கள்' என்று கூறியதிலிருந்து, தந்தை தனது பிள்ளைகளுக்கு மத்தியில் ஏற்றத்தாழ்வாகக் கொடுக்க அனுமதியுள்ளது என்றும், நபியவர்கள் செய்யக்கூடாது என்று தடுத்ததினால் அவ்வாறு செய்வது மக்ரூஹ் என்ற கருத்தையே குறிக்கும் என்று கூறுகின்றனர். (4)


மேலும், இதற்கு பின்வரும் ஆயிஷா றழியல்லாஹு அன்ஹா அவர்களின் ஒரு சம்பவத்தையும் ஆதாரமாகக் கூறுகின்றனர். அதன் சாராம்சம் பின்வருமாறு: 

ஆயிஷா றழியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறுகின்றார்கள்:


எனது தந்தை அபூ பக்ர் றழியல்லாஹு அன்ஹு அவர்களது காபா எனும் இடத்திலுள்ள ஈத்த மரத்தோட்டத்திலிருந்து இருபது வஸக் (சுமார் 2880 கிலே கிராம்) அளவு ஈத்தம் பழங்களை எனக்கு எடுத்துக் கொள்ளும்படி கூறியிருந்தார்கள்.

இந்நிலையில், அவர்களது மரணத் தருவாயில் என்னை அழைத்து பின்வருமாறு கூறினார்கள்:

'மகளே எனக்குப் பின்னால் பிறரின் தயவின்றியும் ஏழ்மையின்றியும் நீர் வாழ வேண்டும் என்பதனாலேயே நான் இருபது வஸக் ஈத்தம் பழத்தை எனது தோட்டதிலிருந்து எடுத்துக் கொள்ளுமாறு கூறியிருந்தேன். அதை நீர் ஏற்கனவே எடுத்திருந்தால் அது உனக்கே சொந்தம். அவ்வாறு எடுக்கவில்லையென்றால் இன்று அது அனந்தரச் சொத்தின் நிலையில் உள்ளது. அதை (எனது மரணத்தின் பின்) உனக்கு மத்தியிலும், உனது இரு சகோதரர்கள் மற்றும் இரு சகோதரிகள் ஆகிய எனது வாரிஸுகளுக்கு மத்தியிலும் குர்ஆனில் கூறப்பட்டுள்ளவாறு பிரித்துக் கொள்ளுங்கள்.' (ஆதாரம் : முஅத்தா மாலிக் - (5)


இவ்வடிப்படையில் பொதுவாக நியாயமான காரணங்கள் இன்றி பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு ஏற்றத் தாழ்வாக கொடுப்பதைத் தவிர்ப்பது மிக முக்கியமாகும்.


எல்லாம் வல்ல அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்.

 

 

 [1]  عَنْ عَامِرٍ، قَالَ: سَمِعْتُ النُّعْمَانَ بْنَ بَشِيرٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، وَهُوَ عَلَى المِنْبَرِ يَقُولُ: أَعْطَانِي أَبِي عَطِيَّةً، فَقَالَتْ عَمْرَةُ بِنْتُ رَوَاحَةَ: لاَ أَرْضَى حَتَّى تُشْهِدَ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَأَتَى رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: إِنِّي أَعْطَيْتُ ابْنِي مِنْ عَمْرَةَ بِنْتِ رَوَاحَةَ عَطِيَّةً، فَأَمَرَتْنِي أَنْ أُشْهِدَكَ يَا رَسُولَ اللَّهِ، قَالَ: «أَعْطَيْتَ سَائِرَ وَلَدِكَ مِثْلَ هَذَا؟»، قَالَ: لاَ قَالَ: «فَاتَّقُوا اللَّهَ وَاعْدِلُوا بَيْنَ أَوْلاَدِكُمْ»،. قَالَ: فَرَجَعَ فَرَدَّ عَطِيَّتَهُ ( رواه البخاري)

[2]  وفي رواية مسلم رحمه الله : فَقَالَ: يَا رَسُولَ اللهِ، اشْهَدْ أَنِّي قَدْ نَحَلْتُ النُّعْمَانَ كَذَا وَكَذَا مِنْ مَالِي، فَقَالَ: «أَكُلَّ بَنِيكَ قَدْ نَحَلْتَ مِثْلَ مَا نَحَلْتَ النُّعْمَانَ؟» قَالَ: لَا، قَالَ: «فَأَشْهِدْ عَلَى هَذَا غَيْرِي»، ثُمَّ قَالَ: «أَيَسُرُّكَ أَنْ يَكُونُوا إِلَيْكَ فِي الْبِرِّ سَوَاءً؟» قَالَ: بَلَى، قَالَ: «فَلَا إِذًا»

[3]  (وَيُسَنُّ لِلْوَالِدِ) وَإِنْ عَلَا (الْعَدْلُ فِي عَطِيَّةِ أَوْلَادِهِ بِأَنْ يُسَوِّيَ بَيْنَ الذَّكَرِ وَالْأُنْثَى) ، لِخَبَرِ الصَّحِيحَيْنِ عَنْ النُّعْمَانِ بْنِ بَشِيرٍ - رَضِيَ اللَّهُ تَعَالَى عَنْهُمَا - أَنَّهُ قَالَ: «وَهَبَنِي أَبِي هِبَةً فَقَالَتْ أُمِّي عَمْرَةُ بِنْتُ رَوَاحَةَ: لَا أَرْضَى حَتَّى تُشْهِدَ رَسُولَ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - فَأَتَى رَسُولَ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - فَقَالَ يَا رَسُولَ اللَّهِ إنَّ أُمَّ هَذَا أَعْجَبَهَا أَنْ أُشْهِدَكَ عَلَى الَّذِي وَهَبْتُ لِابْنِهَا، فَقَالَ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ -: يَا بَشِيرُ أَلَكَ وَلَدٌ سِوَى هَذَا؟ قَالَ: نَعَمْ، قَالَ: كُلَّهُمْ وَهَبْتَ لَهُ مِثْلَ هَذَا؟ قَالَ: لَا، قَالَ: فَارْجِعْهُ» وَفِي رِوَايَةِ الْبُخَارِيِّ " اتَّقُوا اللَّهَ وَاعْدِلُوا بَيْنَ أَوْلَادِكُمْ " وَفِي لَفْظِ مُسْلِمٍ قَالَ " فَأَشْهِدْ عَلَى هَذَا غَيْرِي " وَفِي لَفْظٍ لِأَحْمَدَ " لَا تُشْهِدْنِي عَلَى جَوْرٍ إنَّ لِبَنِيكَ مِنْ الْحَقِّ أَنْ تَعْدِلَ بَيْنَهُمْ " وَلِئَلَّا يُفْضِيَ بِهِمْ الْأَمْرُ إلَى الْعُقُوقِ أَوْ التَّحَاسُدِ.

تَنْبِيهٌ قَضِيَّةُ كَلَامِ الْمُصَنِّفِ أَنَّ تَرْكَ هَذَا خِلَافُ الْأَوْلَى، وَالْمَجْزُومُ بِهِ فِي الرَّافِعِيِّ الْكَرَاهَةُ وَهُوَ الْمُعْتَمَدُ، بَلْ قَالَ ابْنُ حِبَّانَ فِي صَحِيحِهِ: إنَّ تَرْكَهُ حَرَامٌ، وَيُؤَيِّدُهُ رِوَايَةُ " لَا تُشْهِدْنِي عَلَى جَوْرٍ " وَأَكْثَرُ الْعُلَمَاءِ عَلَى أَنَّهُ لَا يَجِبُ، وَحَمَلُوا الْحَدِيثَ عَلَى الِاسْتِحْبَابِ لِرِوَايَةِ «فَأَشْهِدْ عَلَى هَذَا غَيْرِي» ؛ وَلِأَنَّ الصِّدِّيقَ - رَضِيَ اللَّهُ تَعَالَى عَنْهُ - فَضَّلَ عَائِشَةَ - رَضِيَ اللَّهُ عَنْهَا - عَلَى غَيْرِهَا مِنْ أَوْلَادِهِ، وَفَضَّلَ عُمَرُ - رَضِيَ اللَّهُ تَعَالَى عَنْهُ - ابْنًا عَاصِمًا بِشَيْءٍ، وَفَضَّلَ عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ - رَضِيَ اللَّهُ تَعَالَى عَنْهُمَا - بَعْضَ وَلَدِهِ عَلَى بَعْضٍ (وَقِيلَ: كَقِسْمَةِ الْإِرْثِ) فَيُضَعَّفُ حَظُّ الذَّكَرِ كَالْمِيرَاثِ كَمَا أَعْطَاهُمْ اللَّهُ تَعَالَى وَهُوَ خَيْرُ الْحَاكِمِينَ. (مغني المحتاج)

[4]  أَنَّهُ يَنْبَغِي أَنْ يُسَوِّيَ بَيْنَ أَوْلَادِهِ فِي الْهِبَةِ وَيَهَبَ لِكُلِّ وَاحِدٍ مِنْهُمْ مِثْلَ الْآخَرِ وَلَا يُفَضِّلَ وَيُسَوِّيَ بَيْنَ الذَّكَرِ وَالْأُنْثَى وَقَالَ بَعْضُ أَصْحَابِنَا يَكُونُ لِلذَّكَرِ مِثْلُ حَظِّ الْأُنْثَيَيْنِ وَالصَّحِيحُ الْمَشْهُورُ أَنَّهُ يُسَوِّي بَيْنَهُمَا لِظَاهِرِ الْحَدِيثِ فَلَوْ فَضَّلَ بَعْضَهُمْ أَوْ وَهَبَ لِبَعْضِهِمْ دُونَ بَعْضٍ فَمَذْهَبُ الشَّافِعِيِّ وَمَالِكٍ وَأَبِي حَنِيفَةَ أَنَّهُ مَكْرُوهٌ وَلَيْسَ بِحَرَامٍ وَالْهِبَةُ صَحِيحَةٌ وَقَالَ طَاوُسٌ وَعُرْوَةُ وَمُجَاهِدٌ وَالثَّوْرِيُّ وَأَحْمَدُ وَإِسْحَاقُ وَدَاوُدُ هُوَ حَرَامٌ وَاحْتَجُّوا بِرِوَايَةِ لَا أَشْهَدُ عَلَى جَوْرٍ وَبِغَيْرِهَا مِنْ أَلْفَاظِ الْحَدِيثِ وَاحْتَجَّ الشَّافِعِيُّ وَمُوَافِقُوهُ بِقَوْلِهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَشْهِدْ عَلَى هَذَا غَيْرِي قَالُوا وَلَوْ كَانَ حَرَامًا أَوْ بَاطِلًا لَمَا قَالَ هَذَا الْكَلَامَ (شرح صحيح مسلم)

[5]  رواه  مالك في الموطأ بسنده عن عائشة رضي الله عنهما الله عنها أَنَّهَا قَالَتْ إِنَّ أَبَا بَكْرٍ الصِّدِّيقَ كَانَ نَحَلَهَا جَادَّ عِشْرِينَ وَسْقًا مِنْ مَالِهِ بِالْغَابَةِ فَلَمَّا حَضَرَتْهُ الْوَفَاةُ قَالَ وَاللَّهِ يَا بُنَيَّةُ مَا مِنْ النَّاسِ أَحَدٌ أَحَبُّ إِلَيَّ غِنًى بَعْدِي مِنْكِ وَلَا أَعَزُّ عَلَيَّ فَقْرًا بَعْدِي مِنْكِ وَإِنِّي كُنْتُ نَحَلْتُكِ جَادَّ عِشْرِينَ وَسْقًا فَلَوْ كُنْتِ جَدَدْتِيهِ وَاحْتَزْتِيهِ كَانَ لَكِ وَإِنَّمَا هُوَ الْيَوْمَ مَالُ وَارِثٍ وَإِنَّمَا هُمَا أَخَوَاكِ وَأُخْتَاكِ فَاقْتَسِمُوهُ عَلَى كِتَابِ اللَّهِ قَالَتْ عَائِشَةُ فَقُلْتُ يَا أَبَتِ وَاللَّهِ لَوْ كَانَ كَذَا وَكَذَا لَتَرَكْتُهُ إِنَّمَا هِيَ أَسْمَاءُ فَمَنْ الأُخْرَى فَقَالَ أَبُو بَكْرٍ ذُو بَطْنِ بِنْتِ خَارِجَةَ أُرَاهَا جَارِيَةً " قال ابن حجر في الفتح إسناده صحيح.

Leave a comment

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.