2023.11.06 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் ஒத்துழைப்புக்கும் ஒருங்கிணைப்புக்குமான குழுவின் வழிகாட்டலில் சமூகங்களுக்கிடையில் நல்லுறவைப் கட்டியெழுப்பல் எனும் வேலைத்திட்டத்தின் கீழ் சமூக விஞ்ஞானிகள் அமைப்பின் அங்கத்தவர்களுக்கான இஸ்லாம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி நீர்கொழும்பு காமச்சோடை ஜுமுஆ மஸ்ஜிதில் நடைபெற்றது.
இதில் குறித்த அமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தி பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் பலர் கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சியில் இஸ்லாத்தின் மத, கலாசார விழுமியங்கள் தெளிவுபடுத்தப்பட்டதோடு இஸ்லாம் தொடர்பான பிறமத சகோதரர்களின் சந்தேகளுக்கும் விளக்கமளிக்கப்பட்டன. இதில் ஜம்இய்யாவின் தலைமையகம் சார்பாக ஒத்துழைப்பும் ஒருங்கிணைப்புக்குமான குழுவின் செயலாளர் அஷ்ஷைக் எம்.எப்.எம். பரூத் உட்பட அஷ்ஷைக் இர்ஷாத், அஷ்ஷைக் ஸல்மான் ஆகியோர் கலந்துகொண்டனர். இதனை ஜம்இய்யாவின் நீர்கொழும்பு பிரதேசக் கிளை ஏற்பாடு செய்திருந்தது.