ACJU/NGS/2023/261
2023.10.30 (1445.04.14)
அண்மையில் கலாநிதி. ரொஹான் குணரத்ன அவர்களினால் வெளியிடப்பட்ட ‘Sri Lanka’s Easter Sunday Massacre’ (இலங்கையின் ஈஸ்டர் ஞாயிறு படுகொலை) என்ற நூலில் குறிப்பிடப்பட்டுள்ள தவறான, ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை அடிப்படையாக வைத்து சிலர் முஸ்லிம் சமூகத்தையும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவையும் தொடர்ந்து விமர்சித்துக் கொண்டிருப்பதை நாம் அவதானிக்கிறோம்.
குறித்த நூலை எழுதிய நூலாசிரியருக்கு 2023.09.18 ஆம் திகதி நாம் எமது மறுப்பையும் கண்டனத்தையும் தெரிவித்ததோடு, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவும் இந்நாட்டின் முஸ்லிம் சிவில் சமூக அமைப்புகளும் இணைந்து இந்நாட்டின் பாதுகாப்புக்கும் அமைதிக்கும் பங்களிப்புச் செய்வதற்காக மேற்கொண்டு வந்த மற்றும் வருகின்ற பணிகளை அதில் குறிப்பிட்டு கடிதம் ஒன்றை அனுப்பியிருக்கிறோம்.
மேலும் குறித்த நூலின் உள்ளடக்கங்களை மறுபரிசீலனை செய்து, பிழைகளைத் திருத்தி, ஆதாரபூர்வமான உண்மைகளுடன் மீண்டும் வெளியிடுமாறும் உண்மையான தகவல்கள் மக்களுக்குத் தெரிவிக்கப்படுவதை உறுதிப்படுத்துமாறும் வேண்டுகோள் விடுத்திருக்கிறோம்.
எனவே தொடர்ந்தும் ஆதாரமற்ற, உண்மைக்குப் புறம்பான கூற்றுகளை அடிப்படையாகக் கொண்டு முஸ்லிம் சமூகத்தையோ அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவையோ ஈஸ்டர் தாக்குதல் சம்பந்தமான விடயத்தில் குற்றம்சாட்ட வேண்டாமென்று வேண்டிக்கொள்கிறோம்.
இணைப்பு 01 – நூலாசிரியருக்கு அனுப்பிய கடிதம்:
https://acju.lk/news-ta/acju-news-ta/3120-letter-to-dr-rohan-gunaratna
இணைப்பு 02 – ஈஸ்டர் தாக்குதலுக்கு முன்னர் ஜம்இய்யாவினால் நாட்டின் பாதுகாப்பு மற்றும் ஒற்றுமைக்காக மேற்கொள்ளப்பட்ட பணிகள் (PDF):
https://drive.google.com/file/d/19RTt0MzKnc9kGXxCvKkzcgPIvQnagklm/view?usp=sharing
இணைப்பு 03 – ஈஸ்டர் தாக்குதலுக்குப் பின்னர் ஜம்இய்யாவினால் நாட்டின் பாதுகாப்பு மற்றும் ஒற்றுமைக்காக மேற்கொள்ளப்பட்ட முன்னெடுப்புகள் (PDF):
https://drive.google.com/file/d/1yh7Gwyym6H0ApCKyVUKHQMsy-chf7JEd/view?usp=sharing
அஷ்ஷைக் எம்.ஜே. அப்துல் காலிக்
பதில் தலைவர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித்
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா