ஆசிரியர்களின் ஆடை தொடர்பாக

நவ 09, 2022

ACJU/NGS/2022/367

2022.11.05 (1444.04.09)

 

மதிப்பிற்குரிய ஆசிரியர்கள்

அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மத்துல்லாஹி வபறகாத்துஹுஆசிரியர்கள் மாணவர்களது வழிகாட்டிகளாவார்கள். அவர்களிடமிருந்து கல்வியைப் பெறுவது போன்று அவர்களது வெளித்தோற்றம், ஆடை, அணிகலன்கள் என்பவற்றைப் பார்த்து மாணவ, மாணவிகள் பல பாடங்களைக் கற்றுக் கொள்கின்றனர். எனவே, தமது அறிவுக்கு முக்கியத்துமளிப்பது போன்று தமது நிறைவான ஆடை ஒழுங்கையும், மாணவர்கள் பார்த்து பின்பற்றுமளவு சீர்படுத்திக் கொள்ளல் அவசியமாகும்.


எனவே, கலாச்சார விழுமியங்களைக் கவனத்திற் கொண்டு ஏற்கனவே கல்வி அமைச்சினால் வழங்கப்பட்டுள்ள சுற்று நிருபத்துக்கமைய தங்களது ஆடைகளை அமைத்துக் கொள்ளுமாறு நாம் அனைத்து ஆசிரியர்களையும் விநயமாக வேண்டிக் கொள்கின்றது.


அத்துடன் ஆடைவரையறை தொடர்பில் இஸ்லாம் தெளிவான வழிகாட்டல்களையும் வரையறைகளையும் வழங்கிள்ளது. எனவே அதற்கமைய அவற்றைப் பின்பற்றி தங்களது ஆடைகளை அமைத்துக் கொள்ளுமாறு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா, அனைத்து முஸ்லிம் ஆசிரியர்களையும் வலியுறுத்துகின்றது.
வஸ்ஸலாம்.

 

அஷ்ஷைக் எச். உமர்தீன் 
பதில் தலைவர் 
அகில இலங்கை ஜம்இய்யத்;துல் உலமா

 

அஷ்ஷைக் எம். அர்கம் நூராமித்

பொதுச் செயலாளர்

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

Leave a comment

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.