2022.08.23 (1444.01.24)
வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி புரியுமாறு கோரி கடந்த 2022.08.02 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் உத்தியோகபூர்வ முகநூல் மற்றும் சமூக வலைத்தளப்பக்கங்களில் அறிக்கை வெளியிடப்பட்டிருந்தது.
அதற்கமைய அல்லாஹ்வின் அருளால் நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் தொடர்ச்சியாக உதவிகள் கிடைத்தவண்ணமுள்ளன.
ஜம்இய்யாவின் வேண்டுகோளுக்கிணங்க அல்லாஹ்வுக்காக தூய எண்ணத்தோடு பாதிக்கப்பட்ட பிரதேச மக்களுக்கு உதவிகளை வழங்கிய, வழங்கிக்கொண்டிருக்கின்ற பள்ளி நிர்வாகிகள், மஸ்ஜித் சம்மேளனங்கள், ஜம்இய்யாவின் மாவட்ட மற்றும் பிரதேசக் கிளைகள், சமூக சேவை நிறுவனங்கள், அமைப்புகள் மற்றும் தனவந்தர்கள் அனைவருக்கும் ஜம்இய்யா தனது மனப்பூர்வமான நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறது.
அல்லாஹூ தஆலா உங்கள் அனைவரது நல்லெண்ணங்களையும் ஏற்றுக்கொண்டு நிறைவான நற்கூலியை வழங்குவானாக. மேலும் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் விரைவில் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பவும் இவ்வாறான இழப்புகளிலிருந்து அல்லாஹ் எம்மனைவரையும் பாதுகாக்க வேண்டும் எனவும் அல்லாஹ்வைப் பிரார்த்திக்கிறோம்.
சமூக சேவைப் பிரிவு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா