ACJU/NGS/2022/260
2022.08.12 (1444.01.13)
அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மத்துல்லாஹி வபறகாத்துஹு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா தனது உப பிரிவுகளினூடாக நாடளாவிய ரீதியில் முஸ்லிம் சமூகத்துடைய மற்றும் நாட்டுடைய முன்னேற்றத்திற்காக தம்மால் முடியுமான பணிகளை செய்து வருகின்றது.
கீழ் குறிப்பிடப்படும் உபபிரிவுகளின் பணிகளுக்கு தன்னார்வலராக (Volunteer) இணைந்து தனது நேரம், அனுபவம் மற்றும் நிபுணத்துவ அறிவு ஆகியவற்றினால் பங்களிப்பு மற்றும் ஒத்துழைப்பு செய்ய விரும்பும் உலமாக்கள் பின்வரும் கூகுள் படிவத்தை (Google Form) நிரப்பி எதிர்வரும் 2022.08.31 ஆம் திகதிக்கு முன்னர் அனுப்புமாறு அன்பாக வேண்டிக் கொள்கின்றோம்.
தங்களால் அனுப்பப்படும் விபரங்கள் நிறைவேற்றுக் குழுவால் பரிசீலனை செய்யப்பட்டு தெரிவு செய்யப்படுபவர்கள் தொடர்பு கொள்ளப்படுவர்கள் என்பதை தெரிவித்துக் கொள்வதோடு, உங்களது ஒத்துழைப்புக்கும் பங்களிப்புக்கும் முன்கூட்டியே எமது நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஜஸாக்குமுல்லாஹு கைரா
எல்லாம் வல்ல அல்லாஹுதஆலா நம்மனைவரையும் அவனது தீனுடைய பணிக்காக கபூல் செய்வானாக.
1. ஆலிம்கள் விவகாரம்
2. பிறை விவகாரம்
3. உயர் கல்வி
4. கல்வி
5. அல்குர்ஆன் மத்ரஸா
6. அரபு மத்ரஸா
7. ஆய்வு மற்றும் வெளியீடு
8. சமூக சேவை
9. பிரச்சாரம்
10. இளைஞர் விவகாரம்
11. ஒத்துழைப்புக்கும் ஒருங்கிணைப்புக்குமான பிரிவு (CCC)
12. கிளைகள் ஒருங்கிணைப்பு
13. மகளிர் விவகாரம்
14. ஊடகம்
l கூகுல் படிவத்திற்கான இணைப்பு:
l அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவைப் பற்றிய தொகுப்பு:
https://acju.lk/published/item/1009-prospectus-of-acju
l ஜம்இய்யாவினால் வெளியிடப்பட்ட மன்ஹஜ்:
https://acju.lk/en/published/item/2449-manhaj-doc
இவ்வண்ணம்
அஷ்ஷைக் எம். அர்கம் நூராமித்
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா