அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பத்வாப் பிரிவுக்கு ஒத்துழைப்பு வழங்குவது தொடர்பாக

ஆக 16, 2022

ACJU/FRL/2022/22-269

2022.08.15

1444.01.16

 

செயலாளர்,
மாவட்ட மற்றும் பிரதேசக் கிளைகள்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மத்துல்லாஹி வபறகாத்துஹு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பல்வேறு பிரிவுகளில் பத்வாப் பிரிவு முக்கியமான ஒன்றாகும். இப்பிரிவு மார்க்க சட்டதிட்டங்களையும் வழிகாட்டல்களையும் அவ்வப்போது தேவைப்படும் சந்தர்ப்பங்களில் மக்களுக்கு வழங்கிவருகின்றது. அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் யாப்பின் அடிப்படையில் இக்குழுவுக்கு மூன்றாண்டுகளுக்கொரு முறை நிறைவேற்றுக் குழுவால் புதிய தன்னார்வப் பணியாளர்கள் (Volunteer) நியமிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


அவ்வகையில் 2022 ஆம் ஆண்டு தொடக்கம் 2025 ஆம் ஆண்டு வரைக்குமான மூன்றாண்டுக்களுக்குரிய பத்வாக் குழுவுக்கு தன்னார்வப் பணியாளர்கள் நாடளாவிய ரீதியில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர்.


ஆகவே, ஜம்இய்யாவின் பத்வாக் குழுவில் தன்னார்வப் பணியாளர்களாக இணைந்து பணியாற்ற விருப்பமுள்ளவர்கள் பின்வரும் தகைமைகளைக் கருத்திற்கொண்டு 10.09.2022 ஆம் திகதிக்கு முன்னர் பின்வரும் கூகுல் விண்ணப்பப் படிவத்தை (Google From) நிரப்பி அனுப்புமாறு வேண்டிக் கொள்கின்றோம்.


இம்முறை பத்வாக் குழுவுக்கு 50 தன்னார்வப் பணியாளர்கள் சேர்த்துக் கொள்ளப்படவுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


தகைமைகள் மற்றும் வேண்டுதல்கள்


1. ஆலிமாக இருத்தல்.


2. ஜம்இய்யாவின் அங்கத்துவத்தைப் பெற்றிருத்தல்.


3. பிக்ஹ் துறையில் விசேட கற்கை நெறியை பூர்த்தி செய்திருத்தல். (முஃப்தி, கலைமானி பட்டம், முதுமானி பட்டம், கலாநிதி பட்டம் பெற்றிருப்பது சிறப்புக்குரியது)


4. பிக்ஹ் பாடத்தை கற்பிப்பதில் நீண்ட கால அனுபவம் பெற்றவராக இருத்தல். (10 வருடங்கள் அதற்கு மேலாக)


5. ஜம்இய்யாவினால் பிரகடனப்படுத்தப்பட்ட (மன்ஹஜ்) மார்க்க விவகாரங்களில் இலங்கை முஸ்லிமகளுக்கான அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிலைப்பாட்டையும் வழிகாட்டல்களையும் ஏற்று செயல்படுபவராக இருத்தல். https://acju.lk/news-ta/acju-news-ta/item/2402-manhaj-tamil 


6. ஷரீஆவின் உஸுல், கவாஇத் மற்றும் மகாஸித் போன்றவற்றில் ஆழ்ந்த அறிவும் ஷாபிஈ மத்ஹபின் கிளைச் சட்டங்களில் தேர்ச்சி பெற்றவராகவும் இருத்தல்.

 

7. நாற்பது வயது பூர்த்தியானவராக இருத்தல் நல்லது.

 

குறிப்பு : பத்வாப் பிரிவு மற்றும் பத்வாக் குழுவின் செயற்பாடுகள் தொடர்பான மேலதிக தெளிவுகளுக்கு பின்வரும் இணைப்பை பார்க்கவும். https://acju.lk/methodology-ta அல்லது 0777595913 (அஷ்-ஷைக் ஏ.எம்.எம் மபாஹிம், இணைப்பாளர்- பத்வாப் பிரிவு) என்ற இலக்கத்தை தொடர்பு கொள்ளவும்.


விண்ணப்பிக்க: https://docs.google.com/forms/d/e/1FAIpQLSedV5MAIwcowgiGQX7e7jx1QbbNU9j09nOQE0cb3g4kQB--pA/viewform 


வஸ்ஸலாம்.

 

அஷ்ஷைக் முப்தி எம்.ஐ.எம் ரிழ்வி
தலைவர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 


அஷ்-ஷைக் எம்.அர்கம் நூராமித்
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

 

Last modified onவியாழக் கிழமை, 18 ஆகஸ்ட் 2022 07:22

Leave a comment

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.