நாட்டில் ஏற்பட்டிருக்கும் வறட்சி நிலை நீங்க ஸலாத்துல் இஸ்திஸ்கா மற்றும் துஆக்களின் மூலம் அல்லாஹ்விடம் பிரார்த்திப்போம்

மார் 31, 2022

ACJU/NGS/2022/072

2022.03.31 (1443.08.27)


நாட்டில் பெரும்பாலான பகுதிகளில் நிலவி வரும் வறட்சி காரணமாக மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்;டுள்ளனர்;. இந்நேரத்தில் நாம் அல்லாஹ்வின் அருள் வேண்டி பிரார்த்திப்பது அவசியமாகும்.


அசாதாரண எந்த நிலைமை ஏற்பட்டாலும்; நாம் எமது அன்றாட வாழ்வின் நடைமுறைகளை மீள்பரிசீலனை செய்து திருத்திக் கொள்வதும் அதிகமாக இஸ்திஃபார் செய்வதும் நபிவழியாகும். அதன் மூலம் எமது பாவங்கள் மன்னிக்கப்பட்டு அல்லாஹ்வின் அருள் இறங்கலாம்.


தண்ணீர் நமக்கு அத்தியவசியமான ஒன்றாகும். அது இல்லாமல் போவதால் அல்லது குறைந்து விடுவதால் பயிர்கள் மாண்டு விடுகின்றன. அதுமட்டுமல்லாமல், நமது அன்றாட தேவைகளுக்கும், நம் நாட்டின் மின்சார உற்பத்தி போன்ற பல விடயங்களுக்கும் தண்ணீர் அவசியமான ஒன்றாக காணப்படுகின்றது. எனவே பாவங்களுக்காக தௌபா செய்வதுடன் வறட்சி நீங்கி மழை பொழிய சகல முஸ்லிம்களும் பிரார்த்தனையில் ஈடுபடுமாறும், பாதிக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் பொறுப்பாக உள்ளவர்கள் மழை தேடித் தொழும் தொழுகையை (ஸலாத்துல் இஸ்திஸ்கா) நடாத்துதல் மற்றும் மழை தேடி ஓதும் துஆக்களை ஓதுதல் போன்றவற்றுக்கு ஏற்பாடுகளைச் செய்யுமாறும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா அன்பாய் கேட்டுக் கொள்கிறது.


நபி நூஹ் (அலை) அவர்கள் தமது சமூகத்திற்கு செய்த உபதேசத்தை அல்லாஹ் பின்வருமாறு குறிப்பிடுகின்றான்.


'உங்கள் இரட்சகனிடம் மன்னிப்பைக் கோருங்கள். நிச்சயமாக அவன் மிக்க மன்னிப்புடையவன்' என்றும் கூறினேன். (அவ்வாறு செய்வீர்களாயின் தடைப்பட்டிருக்கும்) மழையை உங்களுக்கு தொடர்ச்சியாக அனுப்புவான். மேலும் பொருட்களையும் குழந்தைகளையும் கொடுத்து உங்களுக்கு உதவி புரிவான். உங்களுக்கு தோட்டங்களையும் உற்பத்தி செய்து அவற்றில் ஆறுகளையும் ஓட்டி வைப்பான்'. (நூஹ்: 10–12)


நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மழை வேண்டி ஓதிய சில துஆக்கள் பின்வருமாறு:


(اللَّهُمَّ اسْقِنا غَيثًا مُغِيثًا مَرِيئًا مَرِيعًا نَافِعاً غَيْرَ ضارٍ، عَاجِلاً غَيْرَ آجِلٍ' - رواه أبو داود (116
(اللَّهُمَّ أغِثْنَا ، اللَّهُمَّ أغِثْنا ، اللهٌمَّ أغِثْنا - 'رواه مسلم (897
(اللهٌمَّ اسْقِ عِبَادَكَ ، وَبَهَائِمَكَ ، وَانْشُرْ رَحْمَتَكَ وَأحْيِ بَلَدَكَ المَيِّت - 'رواه أبو داود (117

 

அஷ்ஷைக் எம். அர்கம் நூராமித் 
பொதுச் செயலாளர் 
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா 

 

அஷ் ஷைக் எம்.எல்.எம். இல்யாஸ்

செயலாளர் - ஃபத்வாக் குழு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

Leave a comment

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.