அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் ஒத்துழைப்பிற்கும் ஒருங்கிணைப்பிற்குமான பிரிவு பிற மதத்தவர்களுடன் நல்லுறவை கட்டியெழுப்புவோம் எனும் திட்டத்தின் கீழ் சர்வதேச இந்துமத குரு பீடாதிபதி மரியாதைக்குரிய ஸ்ரீ ஐயப்பதாஸ சாம்பசிவ சிவாச்சார்யார் அவர்களை 2022.03.11 ஆம் திகதி சந்தித்தது.
இச்சந்திப்பின்போது, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிறைவேற்றுக் குழுச் சார்பாக அதன் உதவிப் பொதுச் செயளாலர்களில் ஒருவரான அஷ்-ஷைக் எம்.எஸ்.எம் தாஸீம், பணியாளர்களான அஷ்ஷைக் சல்மான், அஷ்ஷைக் டி. நுஃமான் உமர் மற்றும் கொழும்பு மாவட்ட வடக்கு பிரதேசக் கிளையின் உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
