மனிதனுக்கு தனது வாழ்க்கையில் எல்லாக் கட்டங்களிலும் தேவைப்படும் வழிகாட்டல்களும் மார்க்க சட்டங்களும் ஒழுக்கங்களும் இஸ்லாத்தில் உள்ளன. இது தொடர்பாக குர்ஆன் சுன்னா இஜ்மா கியாஸ் ஆகியவற்றிலிருந்து பெற்றுக் கொண்ட ஒரு பெரும் வளத்தை மார்க்க சட்டக் கலை அறிஞர்கள் விட்டுச் சென்றுள்ளனர். இவ்வளங்கள் முழு உம்மத்தினாலும் ஏகமனதாக அங்கீகரிக்கப்பட்ட நான்கு மத்ஹபுகளிலும் பொதிந்துள்ளன.
இவ்வடிப்படையில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வழங்கும் பத்வாக்களுக்கு இமாம் ஷாபிஈ ரஹிமஹுமுல்லாஹ் அவர்களது மத்ஹபை அடிப்படையாகக் கொண்டுள்ளது.
இதற்கான காரணம் வரலாற்று ரீதியாக இலங்கையில் அதிகமானவர்களால் பின்பற்றப்படுவதும், ஷாபிஈ மத்ஹப் மத்ரஸதுல் ஹதீஸ் மற்றும் மத்ரஸதுர் ரஈ ஆகிய இரண்டினதும் அடிப்படைகளையும் ஒன்று சேர்த்த ஒரு நடு நலையான மத்ஹபாக இருப்பதுமாகும்.
அத்துடன் இது உம்மத்தின் நலன்களையும் ஒற்றுமையையும் உறுதிப்படுத்துவதற்குக் காரணமாகவுள்ள பிக்ஹு சம்பந்தமான இஜ்திஹாதுகளை உள்ளடக்கியதாகவும் உள்ளது. இவை ஏனைய மத்ஹபுகளில் இருந்தாலும் இவ்விடயத்தில் ஷாபிஈ மத்ஹப் முன்னிலை பெறுகிறது.
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா ஷாபிஈ மத்ஹபைத் தமது பத்வாக்களில் அடிப்படையாக வைத்தாலும், புதிய தற்கால பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்குத் தேவை ஏற்படும் பட்சத்தில் அதற்கான தீர்வு ஷாபிஈ மத்ஹபில் கிடைக்கப்படாத பட்சத்தில், ஏனைய அங்கிகரிக்கப்பட்ட மூன்று மத்ஹபுகளின் கருத்துக்களும், தற்கால பத்வா வழங்கும் அமைப்புக்களின் கருத்துக்களும் பெற்றுக் கொள்ளப்படும்.
அத்துடன் எந்தவொறு விடயத்தையும் தீர்மானிக்கும் பொழுது அதன் ஆதாரங்கள் கருத்தில்கொள்ளப்பட்டே தீர்மானிக்கப்படும்.