17-01-2021 241
மரணித்த ஒருவரின் உடலை பூமியில் அடக்கம் செய்ய வேண்டும் என்பதையே அல் குர்ஆன், அல் ஹதீஸ், அல் இஜ்மாஃ, அல் கியாஸ் ஆகிய மூலாதாரங்கள் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளன. அடக்கம் செய்வது பற்றிய அல் குர்ஆனின் வசனங்கள் : 1. مِنْهَا خَلَقْنَاكُمْ وَفِيهَا نُعِيدُكُمْ وَمِنْهَا نُخْرِجُكُمْ تَارَةً أُخْرَىٰ ( سورة طه : 55) இப்பூமியிலிருந்து நாம் உங்களைப் படைத்தோம்; அதனுள்ளேயே நாம் உங்களை மீட்டுவோம் இன்னும், அதிலிருந்தே நாம் உங்களை மீண்டும் வெளிப்படுத்துவோம். (தாஹா : 55). இவ்வசனத்தில் “நீங்கள் மரணித்ததும் நாம் உங்களை பூமியினுள்ளே மீட்டுவோம்” என்று அல்லாஹ் கூறுவதன் மூலம், மரணித்த அனைவரும் பூமியின் பக்கம் மீட்டப்பட வேண்டும் என்ற கருத்தை அல்லாஹூ தஆலா குறிப்பிடுகின்றான். அடக்கம் செய்வது பற்றி நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் ஹதீஸ்கள் : 6. (عن أبي سعيدٍ الخُدْريِّ رضِيَ اللهُ عنه، أنَّ رسولَ اللهِ صلَّى الله عليه وسلَّم قال: اذهبوا، فادْفِنوا صاحِبَكم. (صحيح مسلم : 2236) நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் தனது தோழர்களிடம், நீங்கள் சென்று உங்களது தோழரை நல்லடக்கம் செய்யுங்கள் என்று கூறினார்கள். (ஸஹீஹ் முஸ்லிம் : 2236) 7. (عن جابرٍ رَضِيَ اللهُ عنه، أنَّ النبيَّ صلَّى الله عليه وسلَّم قال: ادفِنوا القَتْلى في مصارِعِهم. (سنن أبي داود : 8557) நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் உஹத் என்ற இடத்தில் ஷஹீதாக்கப்பட்டவர்களைக் குறித்து தம்தோழர்களிடம், அவர்கள் ஷஹீதாக்கப்பட்ட இடங்களிலேயே அவர்களை நல்லடக்கம் செய்து விடுங்கள் என்று கூறினார்கள். (ஸூனன் அபீ தாவூத் : 8557)
முழு பாத்வா படிக்க17-11-2020 675
நாட்டின் பல பாகங்களிலிருந்தும் பலர், இக்கட்டான இச்சூழ்நிலையில் ஜுமுஆ தொழுகையை நிறைவேற்றும் விடயத்தில், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் வழிகாட்டலை கோரிய வண்ணம் உள்ளனர். ஜுமுஆத் தொழுகை ஏனைய பர்ளான தொழுகைகளை விட்டும் சிறப்பாலும் சட்டத்தாலும், அதனை விடும் பொழுது எச்சரிக்கையாலும் வித்தியாசப்பட்ட ஒரு தொழுகையாகும். ஏனைய தொழுகைகளைப் போன்றல்லாது மக்கள் அனைவரும் ஓர் இடத்தில் ஒன்று சேர்ந்து தொழ வேண்டும் என்பதே ஜுமுஆத் தொழுகை விடயத்தில் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் வழிகாட்டலாகும். ஜுமுஆ நிறைவேறுவதற்கு பல ஒழுக்கங்களும் நிபந்தனைகளும் உள்ளன. அந்நிபந்தனைகளில் ஊரில் வசிக்கும் நிரந்தரக் குடியிருப்பாளர்களில் குறிப்பிட்ட எண்ணிக்கையினர் அங்கு சமுகமளித்திருப்பதும் ஒன்றாகும். என்றாலும், குறித்த எண்ணிக்கை விடயத்தில் ஆதாரங்களின் அடிப்படையில் மார்க்க அறிஞர்களுக்கு மத்தியில் கருத்து வேறுபாடுகள் நிலவுகின்ற போதிலும், ஷாபிஈ மற்றும் ஹன்பலி மத்ஹப்களைச் சேர்ந்த அறிஞர்கள் உட்பட இன்னும் பல அறிஞர்கள் 40 நபர்கள் சமுகமளித்திருப்பது கட்டாயம் என்றும் ஹனபி மற்றும் மாலிகி மத்ஹப்களில் அதைவிட குறைவான எண்ணிக்கையுடையோர் சமுகமளித்திருப்பதைக் கொண்டும் ஜுமுஆ நிறைவுறும் என்றும் கூறுகின்றனர்.
முழு பாத்வா படிக்க17-01-2021 30
மரணித்த ஒரு முஸ்லிமின் உடலை எந்நிலையிலும் தகனம் செய்வதற்கு இஸ்லாத்தில் அனுமதிக்கப்படவில்லை. ஒரு முஸ்லிம் மரணித்த பின்னர், அந்த உடலை குளிப்பாட்டி, கபனிட்டு, தொழுகை நடாத்தி, கௌரவமான முறையில் முஸ்லிம்களது மையவாடியில் அடக்கம் செய்வது முஸ்லிம்களின் மீது பர்ழு கிபாயாவாகும். மேற்குறித்த கிரியைகளில் ஏதேனும் ஒன்று மார்க்கம் அனுமதித்த காரணம் இன்றி நிறைவேற்றப்படாவிட்டால், மார்க்க கடமைகளை சரிவர நிறைவேற்றவில்லை என்ற காரணத்தினால் அல்லாஹ்விடத்தில் அனைத்து முஸ்லிம்களும் குற்றவாளிகளாக கருதப்படுவர். அதனடிப்படையில், மரணித்தவரின் உடலை கட்டாயமாக அடக்கம் செய்யப்படவேண்டும் என்பது மார்க்கத்தில் கட்டாயமானதொன்றாக, நபி சல்லல்லாஹ{ அலைஹி வஸல்லம் அவர்களின் காலம் தொடக்கம் இன்று வரை, நான்கு மத்ஹப்களின் அறிஞர்கள் உள்ளிட்ட அனைவராலும் ஏகோபித்த இஸ்லாமிய தீர்ப்பாகக் கருதப்படுகின்றது. கடலில் பிரயாணம் செய்யும் ஒருவர் மரணிப்பாராயின் அவரது உடலைக் கூட நல்லடக்கம் செய்வதற்கு பொருத்தமான நிலம் ஒன்றை அடைவது சாத்தியமற்ற நிலையில், குறித்த உடலை பாரம் ஒன்றை கட்டி கடலுக்குள் இறக்கி விட வேண்டும். இந்த விதிவிலக்கை வேறு எந்தவொரு சந்தர்ப்பத்துக்கும் உபயோகப்படுத்த முடியாது.
முழு பாத்வா படிக்க09-12-2019 1624
மேலும், அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ அலைஹி வஸல்லம் அவர்கள், வட்டி வாங்குபவரையும் வட்டி கொடுப்பவரையும், அதற்குக் கணக்கு எழுதுபவரையும் அதன் இரு சாட்சிகளையும் சபித்தார்கள். மேலும், “இவர்கள் அனைவரும் (பாவத்தில்) சமமானவர்கள் ஆவர்” என்று கூறினார்கள் என ஜாபிர் ரழியல்லாஹ அன்ஹ அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
முழு பாத்வா படிக்க03-12-2019 1955
இத்தா என்பது ஒரு பெண் தனது கணவனின் மரணத்திலிருந்து அல்லது தலாக், குல்உ, பஸ்கு மூலம் கணவனைப் பிரிந்ததிலிருந்து மறுமணம் செய்யாமல் குறிப்பிட்ட சில காலங்கள் காத்திருப்பதாகும்.
முழு பாத்வா படிக்க03-12-2019 1163
குறிப்பாக புனித அல்-குர்ஆனை போதிக்கவும், இஸ்லாமிய சட்டங்களையும், ஒழுக்கநெறிகளையும் புகட்டவும் அமைக்கப்பட்ட நிறுவனங்களுக்கு உதவ அல்லது அவைகளை மேம்படுத்த இது போன்ற நிதிகளை பயன்படுத்தாமல் இருப்பது மிகவும் முக்கியமாகும். வல்ல அல்லாஹ் நம் அனைவரையும் அவன் பொருந்தும் வழியில் நடத்துவானாக
முழு பாத்வா படிக்க26-11-2019 1522
இதன் அடிப்படையில், இங்கு நீங்கள் தாயின் சகோதரியிடம் (சின்னம்மாவிடம்) இருந்து இரு தடவைகள் பால் குடிகுடித்த உங்கள் தாயின் சகோதரியினது (சின்னம்மாவின்) மகனை நீங்கள் திருமணம் முடிப்பது ஹராமாகாது.த்த விடயம் உறுதியாக இருந்தாலும், ஐந்து தடவைகள் பால் குடிக்கவில்லை என்பதனால் நீங்கள் பால்
முழு பாத்வா படிக்க20-11-2019 1255
என்றாலும், அதிகமான பெண்கள் கறுப்பு நிற ஆடைகளைத் தெரிவுசெய்து அணிகின்றனர். காரணம் கறுப்பு நிற ஆடைகள் சன்மார்க்கத்தில் கூறப்பட்ட நிபந்தனைகளைப் பூர்தியாக உள்ளடக்கிய, சாதாரண, அலங்காரத்தை விட்டும் தூரமான ஓரு ஆடையாகும் என்பதனாலும், இந்நிபந்தனைகளை உள்ளடக்கிய வகையில் கறுப்பல்லாத ஏனைய நிறங்களைத் தெரிவு செய்வதில் சிரமம் இருப்பதனாலுமாகும்.
முழு பாத்வா படிக்க20-11-2019 1518
பொறுப்புடையவர் என்பவர் நம்பிக்கைக்குரிய, பாதுகாக்கக்கூடிய, தான் பொறுப்பெடுத்த விடயத்தின் நலவுக்;காக செயற்படக்கூடியவராவார். தன்னுடைய கண்காணிப்புக்குக் கீழ் எது இருந்தாலும் அதிலே நீதமாகவும், இம்மை மறுமைக்கான நலவுகளை மேற்கொள்ளுதல் வேண்டும் எனவும் வேண்டப்படுவார்.”
முழு பாத்வா படிக்க19-11-2019 1601
ஒரு பெண் ஆசிரியை ஆரம்பப் பிரிவு மாணவர்களுக்கு - அதாவது பெண்களின் அழகைப் பார்க்கவேண்டும் என்ற உணர்வு இல்லாத, அதைப்பற்றிய அறிவில்லாத சிறார்களுக்குக் - கல்வி கற்றுக் கொடுப்பதில் தவறில்லை. இருப்பினும், அம்மாணவர்கள் எப்பொழுது பருவ வயதை அடைவார்களோ அல்லது பருவ வயதை அண்மித்து, பெண்களின் அழகைப் பார்க்கவேண்டும் என்ற உணர்வு உண்டாகும் வயதை அடைவார்களோ அப்பொழுது அவர்களுக்கு ஆண் ஆசிரியர்களைக் கல்வி கற்றுக் கொடுப்பதற்கு நியமித்தல் வேண்டும்.
முழு பாத்வா படிக்க10-06-2019 2975
மேலும் படிக்கஎல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே. ஸலாத்தும் ஸலாமும் அவனது இறுதித் தூதர் முஹம்மத் (ஸல்லல்லாஹ{ அலைஹி வஸல்லம்) அவர்கள் மீதும்...
16-10-2019 914
மேலும் படிக்கஅஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹி வபறகாத்துஹஎல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே. சலாத்தும், ஸலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் (சல்லல்லாஹ அலைஹி...
15-11-2019 1418
மேலும் படிக்கஉழ்ஹிய்யா இஸ்லாத்தின் முக்கியமான அமலாகும். சில அறிஞர்கள் உழ்ஹிய்யாக் கொடுப்பது வாஜிப் என்றும் இன்னும் சிலர் முக்கியமான சுன்னத் என்றும்...
05-08-2019 1059
மேலும் படிக்கஅன்புடையீர். அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹ எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே. சலாத்தும், ஸலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் (சல்லல்லா{ஹ அலைஹி...
15-11-2019 1297
மேலும் படிக்கஎல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே. சலாத்தும், ஸலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும்...
12-03-2012 1506
மேலும் படிக்கஎல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே. சலாத்தும், ஸலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் (சல்லல்லாஹ அலைஹி வஸல்லம்) அவர்கள் மீதும்...
04-08-2016 1755
மேலும் படிக்கஎல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே. ஸலாத்தும், ஸலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும்...
08-03-2016 1580
மேலும் படிக்கஎல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே. சலாத்தும், ஸலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மீதும்...
05-08-2016 1607
மேலும் படிக்கஎல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே. சலாத்தும், ஸலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும்...
04-08-2016 1785
மேலும் படிக்க