• தமத்துஃ முறையில் ஹஜ் செய்யக்கூடியவர்கள் முதலில் உம்ராவை செய்துவிட்டு துல்ஹிஜ்ஜாவின் பிறை 08 ல் ஹஜ்ஜுக்காக இஹ்ராம் செய்வார்கள். ஆனால் அவ்வல் மதீனா செல்பவர்கள் மதீனாவிலிருந்து வரும்போது பிறை 05 லே இஹ்ராம் செய்கிரார்கள். இதற்கு தமத்துஃ என்று சொல்லப்படும

  தமத்துஃ முறையில் ஹஜ் செய்யக்கூடியவர்கள் உம்ரா செய்துவிட்டு மீக்காத்தை விட்டும் வெளியில் சென்று மீண்டும் ஹஜ் செய்வதற்காக மக்கா சென்றாலும் ஷாபிஈ மத்ஹபின் சரியான கருத்துப்படி அவருக்கு முதமத்திஃ என்றே சொல்லப்படும். இந்நிலையில், முதமத்திஃ ஒருவர் உம்ரா செய்துவிட்டு மதீனா சென்று மீண்டும் ஹஜ்ஜுக்காக மக்கா வரும் போது மீக்காத்தில் இஹ்ராம் கட்டுவதால் இரு அமல்களுக்கும் இரு மீக்காத்துகள் கிடைத்து விடுகின்றது என்பதனால் அவர் முதமத்திஃ ஆக இருந்தாலும் தமு கொடுக்கத்தேவையில்லை. ஏனெனில் முதமத்திஃ தமு கொடுப்பதற்கான நிபந்தனைகளில் ஒன்று அவர் மீண்டும் ஹஜ்ஜுக்காக மீகாத் ஒன்றுக்கு செல்லாமல் இருத்தல் வேண்டும் என்பதாகும். وإِنَّمَا يَجِبُ الدَّمُ على المُتَمَتع بأرْبَعة شُرُوط: أن لا يَعُودَ إلى ميقَات بَلَده لإحْرَام الحَج وأنْ يكُونَ إِحْرَامهُ بالعُمْرَة في أشْهُر الْحَج وأنْ يَحُجَّ من عامِهِ وأنْ لا يكون مِنْ حاضري المسْجِد الْحَرَام وهم Read More
 • பள்ளிவாயலுக்குச் சொந்தமான வெற்றுக்காணியில் விவசாயம் செய்ய முடியுமா?

  மஸ்ஜிதுக்குச் சொந்தமான வெற்றுக் காணியை மஸ்ஜித் நிர்வாகிகளின் அனுமதியுடன் சந்தை விலைக்கு தனிப்பட்ட ஒரு நபர் வாடகை செலுத்தி விவசாயம் செய்வதற்கு அனுமதியுண்டு. செலுத்தப்படும் வாடகையே மஸ்ஜிதுக்கு இலாபமாக அமையப்பெறும். வாடகைக்கு கொடுக்கப்படும் காலம் மூன்று அல்லது அதைவிடக் குறைவான காலமாக இருப்பது சாலச்சிறந்தது. ஏனெனில், இதனால் ஏற்படும் பல சட்டப்பிரச்சினைகளை எதிர்காலத்தில் தவிர்த்துக்கொள்ளலாம். Read More
 • வெளிநாடு சென்று வரும் பெண்களின் அன்பளிப்புகளைப் பெறல்

  அன்பளிப்புகள் இஸ்லாத்தில் தடைசெய்யப்பட்ட வட்டி, சூது போன்றவைகளால் ஈட்டப்பட்டதாக இல்லாவிட்டால், அவற்றை ஏற்றுக்கொள்ளலாம். Read More
 • பிற மதத்தவர்களின் அன்பளிப்புகளை ஏற்றுக்கொள்ளலாமா?

  முஸ்லிம், முஸ்லிம் அல்லாதவர்கள் மஸ்ஜிதுக்கு வழங்கும் அன்பளிப்புகள், இஸ்லாத்தில் தடைசெய்யப்பட்ட வட்டி, சூது போன்றவைகளால் ஈட்டப்பட்டதாக இல்லாவிட்டால், அவற்றை ஏற்றுக்கொள்ளலாம்.  Read More
 • 1