தமத்துஃ முறையில் இஹ்ராம் நிய்யத் வைத்த ஒருவர் உம்ராவைச் செய்து விட்டு ஹஜ்ஜுக்கு முன்பதாக இன்னுமொரு உம்ரா செய்வது கூடுமா?  

தமத்துஃ முறையில் நிய்யத் வைத்த ஒருவர் உம்ரா செய்துவிட்டு ஹஜ்ஜுடைய அமல்களை ஆரம்பிக்குமுன் உள்ள இடைப்பட்ட காலத்திலோ அல்லது பொதுவாக ஏனைய காலத்திலோ,  ஒரே பயணத்தில் ஒன்றை விடப் பல உம்ராக்களை செய்வது விரும்பத்தக்க அமலாக இருந்தாலும், ஹஜ்ஜுடைய காலங்களில் ஒன்றை விட அதிகமான உம்ராக்களை நிறைவேற்றும் பொழுது பர்ளான உம்ராவை நிறைவேற்றுபவர்களுக்கு இடநெருக்கடி ஏற்படுமாயின் அல்லது தனக்கு ஹஜ்ஜுடைய அமல்களை நிறைவேற்றுவதற்கு சிரமம் ஏற்படலாம் என் அஞ்சினால் மேலதிக உம்ராக்களை செய்யாமல் இருத்தல் நல்லது.

وقد يمتنع الإحرام بها  (أي بالعمرة) في أوقات منها ما لو كان محرما بعمرة كما تقدم ومنها ما لو كان محرما بحج فإن العمرة لا تدخل على الحج ومنها ما إذا أحرم بها قبل نفره لاشتغاله بالرمي والمبيت فهو عاجز عن التشاغل بعملها- 'مغنى المحتاج'

ويسن الإكثار منها ولو في العام الواحد فلا تكره في وقت ولا يكره تكرارها فقد أعمر صلى الله عليه وسلم عائشة في عام مرتين واعتمرت في عام مرتين بعد وفاته وفي رواية ثلاث عمر – 'مغنى المحتاج'