தமத்துஃ முறையில் இஹ்ராம் நிய்யத் வைத்த ஒருவர் உம்ராவைச் செய்து விட்டு ஹஜ்ஜுக்கு முன்பதாக இன்னுமொரு உம்ரா செய்தல்
தமத்துஃ முறையில் நிய்யத் வைத்த ஒருவர் உம்ரா செய்துவிட்டு ஹஜ்ஜுடைய அமல்களை ஆரம்பிக்குமுன் உள்ள இடைப்பட்ட காலத்திலோ அல்லது பொதுவாக ஏனைய காலத்திலோ, ஒரே பயணத்தில் ஒன்றை விடப் பல உம்ராக்களை செய்வது விரும்பத்தக்க அமலாக இருந்தாலும், ஹஜ்ஜுடைய காலங்களில் ஒன்றை விட அதிகமான உம்ராக்களை நிறைவேற்றும் பொழுது பர்ளான உம்ராவை நிறைவேற்றுபவர்களுக்கு இடநெருக்கடி ஏற்படுமாயின் அல்லது தனக்கு ஹஜ்ஜுடைய அமல்களை நிறைவேற்றுவதற்கு சிரமம் ஏற்படலாம் என அஞ்சினால் மேலதிக உம்ராக்களைச் செய்யாமல் இருத்தல் நல்லது. Read More
பள்ளிவாயலுக்குச் சொந்தமான வெற்றுக்காணியில் விவசாயம் செய்ய முடியுமா?
மஸ்ஜிதுக்குச் சொந்தமான வெற்றுக் காணியை மஸ்ஜித் நிர்வாகிகளின் அனுமதியுடன் சந்தை விலைக்கு தனிப்பட்ட ஒரு நபர் வாடகை செலுத்தி விவசாயம் செய்வதற்கு அனுமதியுண்டு. செலுத்தப்படும் வாடகையே மஸ்ஜிதுக்கு இலாபமாக அமையப்பெறும். வாடகைக்கு கொடுக்கப்படும் காலம் மூன்று அல்லது அதைவிடக் குறைவான காலமாக இருப்பது சாலச்சிறந்தது. ஏனெனில், இதனால் ஏற்படும் பல சட்டப்பிரச்சினைகளை எதிர்காலத்தில் தவிர்த்துக்கொள்ளலாம். Read More
வெளிநாடு சென்று வரும் பெண்களின் அன்பளிப்புகளைப் பெறல்
அன்பளிப்புகள் இஸ்லாத்தில் தடைசெய்யப்பட்ட வட்டி, சூது போன்றவைகளால் ஈட்டப்பட்டதாக இல்லாவிட்டால், அவற்றை ஏற்றுக்கொள்ளலாம். Read More
பிற மதத்தவர்களின் அன்பளிப்புகளை ஏற்றுக்கொள்ளலாமா?
முஸ்லிம், முஸ்லிம் அல்லாதவர்கள் மஸ்ஜிதுக்கு வழங்கும் அன்பளிப்புகள், இஸ்லாத்தில் தடைசெய்யப்பட்ட வட்டி, சூது போன்றவைகளால் ஈட்டப்பட்டதாக இல்லாவிட்டால், அவற்றை ஏற்றுக்கொள்ளலாம். Read More