புகைத்தல் சம்பந்தமாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா 023/ACJU/F/2006 ஆம் இலக்க பத்வா ஒன்றை 2006.10.11ஆம் திகதி வெளியிட்டுள்ளது. அந்த பத்வாவில் புகைத்தலுக்குப் பயன்படுத்தப்படும் திரவியங்களில் ஒன்றான புகையிலை மூலம் பாரிய நோய்களும், தீங்குகளும் ஏற்படுகின்றன என்பதால், சிகரட் போன்றவைகளை புகைப்பதும் அதை விற்பனை செய்வதும் ஹராமாகும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.