பிரிவு

இதை மதிப்பிடுங்கள்
(4 votes)
மனிதனுக்கு தொல்லை தரும் உயிரினங்களில் நுளம்பும் ஒன்றாகும். சில வேளை உயிராபத்தை ஏற்படுத்தவும் வாய்ப்புண்டு. நுளம்பு மட்டை (Mosquito Racket) என்ற உபகரணத்தைப் பயன்படுத்தி நுளம்பைக் கொல்லும் போது அதிலுள்ள மின்சாரத்தின் தாக்கத்தினால் ஏற்படும் இரத்த அழுத்தத்தினாலேயே நுளம்பு இறக்கின்றது.
இதை மதிப்பிடுங்கள்
(3 votes)
ஃதிகாஃப் என்பது இஸ்லாமிய மார்க்கத்தில் முக்கிய இடத்தை வகிக்கும் ஒரு வணக்கமாகும். இது பற்றி அல்லாஹ் அல்-குர்ஆனில் பின்வருமாறு கூறியுள்ளான்: 'நீங்கள் மஸ்ஜித்களில் தங்கியவர்களாக (இஃதிகாஃப்) இருக்கும் போது (உங்கள் மனைவியராகிய) அவர்களுடன் கூடாதீர்கள்.' (அல்-பகரஹ் : 187)
இதை மதிப்பிடுங்கள்
(6 votes)
எப்பொழுது அரசாங்கம் கட்டாயமாக ஊழியர்களின் ஊதியத்திலிருந்து ஊழியர் சேமலாப நிதியாகவோ அல்லது ஊழியர் நம்பிக்கை நிதியாகவோ எடுத்துக் கொள்கின்றதோ, அந்நிதி ஊழியர்களுக்கு வழங்க்பபடாதவரை ஊழியர்களின் பணமாக கணிக்கப்படமாட்டாது. எனவே ஊழியர்கள் அந்நிதியைப் பெறும்போது அது அரசாங்கம் கொடுக்கும் உபகாரத்தெகை என்றே கணிக்கப்படும். எனவே, இம்முறையில் கிடைக்கும் மேலதிகப் பணத்தைத் தான் பாவிக்கலாம்.
இதை மதிப்பிடுங்கள்
(1 Vote)
மனித சமுதாயத்துக்கு மத்தியில் பல்வேறுபட்ட பிரச்சினைகளும் தேவைகளும் ஏற்படுகின்ற வேளையில் ஒருவர் மற்றவருக்கு உதவி செய்வது மனிதாபிமானக் கடமையாகும். இவ்வாறு உதவி செய்யும் போது நன்மையான விடயங்களுக்கு மட்டும் உதவ வேண்டும், பாவமான விடயங்களுக்கு உதவக் கூடாது என்பதை பின் வரும் அல்-குர்ஆன் வசனம் தெளிவுபடுத்துகின்றது:
இதை மதிப்பிடுங்கள்
(1 Vote)
திடீர் விபத்தின் காரணமாக ஒருவர் மரணமாகுவதை 'அகால மரணம்' என மக்கள் பொதுவாகக் கூறுகின்றனர். இவ்வார்த்தையை தமிழ் இலக்கண அடிப்படையில் நோக்கும் போது அகாலம் என்னும் சொல் காலம் என்பதின் எதிர்மறையாக அமைகின்றது. இதன்படி ஒருவர் அகால மரணமானார் என்று கூறும் போது அவர் தனது தவனைக்கு முன் மரணமானார் என்ற கருத்தை அது உணர்த்துகின்றது.
இதை மதிப்பிடுங்கள்
(1 Vote)
'மனிதர்களில் அறிவின்றி அல்லாஹ்வின் வழியிலிருந்து (மனிதர்களை) வழிகெடுப்பதற்காக வீணான செய்திகளை விலைக்கு வாங்குபவர்களும் இருக்கின்றனர். மேலும் (அல்லாஹ்வின் வசனங்களாகிய) அவைகளைப் பரிகாசமாகவும் எடுத்துக்கொள்கின்றனர். இத்தகையோர் - அவர்களுக்கு இழிவுதரும் வேதனையுண்டு'. (லுக்மான் - 06
இதை மதிப்பிடுங்கள்
(3 votes)
'செயற்கையாக கருத்தரிக்கவைக்கும் முறையாகிறது உடலுறவின்றி ஆணின் இந்திரியத்தை பெண்ணின் கர்ப்பப்பையில் செலுத்துவதாகும். அது கணவனின் இந்திரியத்தை மனைவியின் கர்ப்பப்பையில் செலுத்துவதாக இருந்தால் இஸ்லாமிய மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகும்.
இதை மதிப்பிடுங்கள்
(1 Vote)
காபிர்களுக்கு முதலில் ஸலாம் கூறுவது ஓரு முஸ்லிமுக்கு ஆகாது என்றும், காபிர்கள் முதலில் ஸலாம் கூறினால் 'வ அலைக்கும்' என்று பதில் கூற வேண்டும் என்பது அனேகமான மார்க்க அறிஞர்களின் முடிவாகும்
இதை மதிப்பிடுங்கள்
(2 votes)
ஒரு மஜ்லிஸில் அல்லாஹ்வை ஞாபகம் செய்வதும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது ஸலவாத் சொல்வதும் அம்மஜ்லிஸ் பூரணமாகுவதற்கு காரணமாக அமைகின்றது. ஆகையால், ஒரு மஜ்லிஸ் நிறைவு பெறும் போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது ஸலவாத்தை சொல்லிவிட்டு மஜ்லிஸின் குற்றப்பரிகாரமாகிய
இதை மதிப்பிடுங்கள்
(3 votes)
'அல்-குர்ஆன் நெருப்பில் வீழ்ந்து எரிதல், நீரில் மூழ்குதல், அல்லது அசுத்தத்தில் விழுதல் போன்ற ஆபத்தான நிலையில் இருக்குமாயின் தொடக்குடையவர்கள்கூட அதனைப் பாதுகாக்கும் நோக்குடன் எடுப்பது கடமையாகும்' என்று மார்க்க அறிஞர்கள் குறிப்பிடுவதாக இமாம் அந்-நவவி (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். (அல்-மஜ்மூஃ - பாகம் : 02, பக்கம் : 60)
இதை மதிப்பிடுங்கள்
(2 votes)
கொடும்பாவி எரிக்கும் சமயம் ஒருவருடைய உருவம் நெருப்பினால் தண்டிக்கப்படுகின்றது. அத்துடன் கொடும்பாவி எரிப்பதன் அர்த்தம் அக்கொடும்பாவி மூலம் நாடப்படுபவர் கையில் அகப்பட்டால் அவரைத் தீயிட்டுக் கொழுத்துவோம் என்பதாம். இவ்வாறு எதனையும் நெருப்பினால்; தண்டிக்கக்கூடிய அதிகாரம் அல்லாஹ்வைத் தவிர வேறு எவருக்கும் இல்லை. அது ஒரு மாதிரி உருவமாயினும் அதனையும் எரிக்கும் அதிகாரம் எவருக்கும் வழங்கப்படவில்லை. இதனைப் பின்வரும் ஹதீஸ் தெளிவுபடுத்துவதாக மார்க்க அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர்.