பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்களுக்கு ஸக்காத் வழங்கல்

எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே. சலாத்தும், ஸலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும், அவர்களின் கிளையார்கள், தோழர்கள் மீதும் உண்டாவதாக!

ஸக்காத்தைப் பெறுவதற்குத் தகுதியுடையவர்களைப் பற்றி அல்-குர்ஆன் பின்வருமாறு குறிப்பிடுகிறது

إنما الصدقات للفقراء والمساكين "والعاملين عليها والمؤلفة قلوبهم وفي الرقاب والغارمين وفي سبيل الله وابن السبيل فريضة من الله والله عليم حكيم"  (09:60)

“(ஸக்காத் என்னும்) தானங்கள் பரம ஏழை, ஏழை, அதன் உத்தியோகத்தர்களுக்கும், புதிதாக இஸ்லாத்தில் நுழைந்தவர்களுக்கும், அடிமைகளை விடுதலை செய்வதற்கும், கடனில் மூழ்கியவர்களுக்கும், அல்லாஹ்வுடைய பாதையில் போராடுவதற்கும், வழிப்போக்கர்களுக்கும் (உரித்தானதாக) அல்லாஹ் ஏற்படுத்திய கடமையாகும். அல்லாஹ் மிக்க அறிந்தோனும,; ஞானமுடையோனுமாயிருக்கிறான்”. (09:60)

மேற்குறிப்பிடப்பட்ட கூட்டத்தார்களுக்கே ஸக்காத் வழங்கப்படல்வேண்டும். இமாம் ஷாபிஈ றஹிமஹுல்லாஹ் “அல்-உம்மு” வில்:

قال الإمام الشافعي رضي الله عنه في كتاب الأم:"فأحكم الله عزَّ وجلَّ فرض الصدقات في كتابه ثم أكدها فقال: "فريضة من الله"، قال: وليس لأحد أن يقسمها على غير ما قسمه الله عزَّ وجلَّ". (كتاب قسم الصدقات  ,الأم)

“அல்லாஹு தஆலா குர்ஆனில் ஸக்காத் கடமை என்று கூறியபின் மீண்டும்,  அல்லாஹ்விடமிருந்து கடமையாக்கப்பட்டது என்று கூறி உறுதிப்படுத்தியுள்ளான். எனவே, அல்லாஹ் ஸக்காத்தை பிரித்ததற்கு மாற்றமாக யாருக்கும் பிரிக்க முடியாது.” என்று கூறியுள்ளார்கள்.

பாடசாலை ஆசியர்கள், மாணவர்கள் பரம ஏழை, ஏழை, கடனாளி போன்ற அல்-குர்ஆனில் கூறப்பட்ட கூட்டத்தினர்களில் உள்ளவர்களாக இருந்தால் அவர்களுக்கு ஸக்காத் வழங்கலாம்.  

அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்.

வஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மத்துல்லாஹி வபறக்காத்துஹ்.