மேற்படி விடயம் சம்பந்தமாக பத்வாக் கோரி தங்களால் அனுப்பப்பட்ட 2013.11.06 திகதியிடப்பட்ட கடிதம் இத்தால் தொடர்புகொள்ளப்படுகிறது. 

எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே. சலாத்தும், ஸலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மீதும், அவர்களது கிளையார்கள், தோழர்கள் மீதும் உண்டாவதாக!

'வக்ஃப்' என்பது நிலைத்திருந்து பயனளிக்கும் பொருட்டு செய்யப்படுகின்ற ஒரு தர்ம காரியமாகும். வக்ஃப் செய்யப்பட்ட ஒரு பொருளை விற்கவோ, வேறு யாருக்கேனும் இலவசமாகக் கொடுக்கவோ, கைமாற்றவோ கூடாது என்பதே மார்க்க அறிஞர்களின் ஏகோபித்த தீர்ப்பாகும். இதற்கு அடிப்படையாக மார்க்க அறிஞர்கள் உமர் றழியல்லாஹு அன்ஹு அவர்களோடு சம்பந்தப்பட்ட நபி மொழியை ஆதாரம் காட்டுகின்றனர்.

ஒரு தடவை உமர் றழியல்லாஹு அன்ஹு அவர்கள் நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் யாரஸூலல்லாஹ் (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) இது வரை எனக்கு கிடைத்திராத மிகவும் பெறுமதியான சொத்தை கைபரில் பெற்றுக்கொண்டுள்ளேன். அதிலே நீங்கள் என்னை எவ்வாறு ஏவுகின்றீர்கள்? எனக் கேட்டார்கள். அதற்கு நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நீங்கள் விரும்பினால், அது விற்கப்பட, நன்கொடையாக வழங்கப்பட, அனந்தரமாக்கப்பட முடியாத, ஸதகாவாக 'வக்ப்' செய்துவிடுங்கள் என்று கூறினார்கள். உமர் றழியல்லாஹு அன்ஹு அவர்கள் அதை ஏழைகளுக்கும், நெருங்கிய் உறவினர்களுக்கும், உரிமைச் சீட்டு  எழுதப்பட்ட அடிமைகளுக்கும், போராளிகளுக்கும் வழிப்போக்கர்களுக்கும், விருந்தாளிக்கும் வக்ப் செய்தார்கள்.

ஆதாரம் : சஹீஹ் அல் புகாரி, ஹதீஸ் எண்: 2586;.

ஒரு பொருளை வக்ஃப் செய்த நபர் அல்லது குழு எந்த நோக்கத்துக்காக அதை வக்ஃப் செய்தார்களோ அந்நோக்கம் மாறாமலும் மேலும் அந்நோக்கத்தை நிறைவேற்றுவதற்கு எவ்விதப்  பாதிப்பும் ஏற்படாதவாறு அதனைப் பயன்படுத்துவது அதன் நிருவாகிகளின் 

கடமையாகும் என்பதுடன் தக்க காரணம் இன்றி அப்பொருளை வக்ஃப் செய்யப்பட்ட நோக்கத்துக்கு மாறாகப் பயன்படுத்துவது மிகப் பெரிய தவறுமாகும்.

நீங்கள் உங்கள் கடிதத்தில் 'அல்-குர்ஆனை மனனம் செய்வதற்கும் அது சார்ந்த துறைகளைக் கற்பதற்கும் வக்ஃப் செய்யப்பட்ட காணி' என்று குறிப்பிட்டதற்கு அமைய அல்-குர்ஆனை மனனம் செய்வதற்கும் அது சார்ந்த துறைகளைக் கற்பதற்கும் மட்டுமே அந்தக் காணியைப் பயன்படுத்த வேண்டும்.

அதற்கு மாறாக வேறு தேவைகளுக்கு, அது எவ்வித விடயங்களாக இருந்தாலும் அதனைப் பயன்படுத்துவது எவ்வகையிலும் அனுமதிக்க முடியாத காரியமாகும்.

வக்ப் செய்தவரது நிபந்தனைகளுக்கு மாற்றமாக வக்ப் செய்யப்பட்ட பொருளைப் பயன்படுத்துவது கூடாது என்பது விடயமாக மார்க்க அறிஞர்கள் பின்வருமாறு கூறியருக்கின்றார்கள்.

( وَإِذَا حَكَمَ بِاجْتِهَادٍ ) وَهُوَ مِنْ أَهْلِهِ ، أَوْ بِاجْتِهَادِ مُقَلَّدِهِ ( ثُمَّ بَانَ ) أَنَّ مَا حَكَمَ بِهِ ( خِلَافَ نَصِّ الْكِتَابِ ، أَوْ السُّنَّةِ ) الْمُتَوَاتِرَةِ ، أَوْ الْآحَادِ ( أَوْ ) بَانَ خِلَافَ ( الْإِجْمَاعِ ) ، وَمِنْهُ مَا خَالَفَ شَرْطَ الْوَاقِفِ ( أَوْ ) خِلَافَ ( قِيَاسٍ جَلِيٍّ ) ، وَهُوَ مَا يَعُمُّ الْأُولَى ، وَالْمُسَاوِيَ قَالَ الْقَرَافِيُّ : أَوْ خَالَفَ الْقَوَاعِدَ الْكُلِّيَّةَ قَالَتْ الْحَنَفِيَّةُ : أَوْ كَانَ حُكْمًا لَا دَلِيلَ عَلَيْهِ أَيْ : قَطْعًا فَلَا نَظَرَ ؛ لِمَا بَنُوهُ عَلَى ذَلِكَ مِنْ النَّقْضِ فِي مَسَائِلَ كَثِيرَةٍ قَالَ بِهَا غَيْرُهُمْ لِأَدِلَّةٍ عِنْدَهُ . قَالَ السُّبْكِيُّ : أَوْ خَالَفَ الْمَذَاهِبَ الْأَرْبَعَةَ ؛ لِأَنَّهُ كَالْمُخَالِفِ لِلْإِجْمَاعِ أَيْ : لِمَا يَأْتِي عَنْ ابْنِ الصَّلَاحِ ( نَقَضَهُ ) أَيْ : أَظْهَرَ بُطْلَانَهُ وُجُوبًا ، وَإِنْ لَمْ يُرْفَعْ إلَيْهِ (تحفة المحتاج)

والأصل فيه أن شروط الواقف مرعية ما لم يكن فيها ما ينافي الوقف وفيه مسائل (روضة الطالبين)

( والأصح أنه إذا وقف بشرط أن لا يؤجر ) أصلا أو أن لا يؤجر أكثر من سنة صح الوقف و ( اتبع شرطه ) كسائر الشروط المتضمنة للمصلحة. (مغنى المحتاج)

குறிப்பிட்ட காணி வக்ப் செய்யப்படாமல் நன்கொடையாக வழங்கப்பட்டிருப்பின் அக்காணியை நிருவகிப்பவர்களது மன விருப்பத்துடன் பிற தேவைகளுக்காக கொடுக்கலாம்.

அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்.

வஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹ்.