எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே. சலாத்தும், ஸலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மீதும், அவர்கள் கிளையார்கள், தோழர்கள் மீதும் உண்டாவதாக!
ஒரு பெண் தகுந்த திறமையும் அனுபவமும் இருக்கும் பட்சத்தில் வக்ப் சொத்துக்களைப் பராமரிக்க முடியும். இதற்கு, உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் தான் செய்த வக்ப் சொத்துக்களை பராமரிக்கும்படி தனது மகள் ஹப்ஸா ரழியல்லாஹு அன்ஹா அவர்களுக்கு வசிய்யத் செய்ததை ஸுனன் அபீ தாவூத் எனும் கிரந்தத்தின், باب ما جاء في الرجل يوقف الوقف எனும் பாடத்திற்கு கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள ஹதீஸ் ஆதாரமாக உள்ளது.
மேலும், பெண்கள் வக்ப் சொத்துக்களை பராமரிக்க முடியுமென்று “துஹ்பத்துல் முஹ்தாஜ்” உடைய ஹாஷியாவிலும் (பகுதி : 08, பக்கம் : 159), “நிஹாயத்துல் முஹ்தாஜ்” உடைய ஹாஷியாவிலும் (பகுதி : 05, பக்கம் : 399) குறிப்பிடப்பட்டுள்ளது.
வக்ப் விடயத்தில் வக்ப் செய்தவர் யாரையாவது ஒருவரை குறிப்பாக நிர்வகிக்கும்படி நிபந்தனையிட்டு, அவர் அதற்கு தகுதியானவராக இருப்பின், அது கவனத்தில் கொள்ளப்படல் வேண்டும்.
எல்லாம் வல்ல அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்
வஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹு