Subject : மஸ்ஜிதில் பெண்களுக்கு தராவீஹ் தொழுகை நடாத்துதல்.

FATWA # 017/F/ACJU/2009

ஆக 05, 2018

வெளியிடப்பட்ட

தொழுகை

மஸ்ஜிதில் பெண்களுக்கு தராவீஹ் தொழுகை நடாத்துதல் பற்றி தீர்ப்புக் கோரி 2008.07.01 தேதியிட்டு தங்களால் அனுப்பிவைக்கப்பட்ட கடிதம் இத்தால் தொடர்பு கொள்ளப்படுகின்றது.

எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே. சலாத்தும், ஸலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மீதும், அவர்களது கிளையார்கள், தோழர்கள் மீதும் உண்டாவதாக!

பெண்கள் மஸ்ஜிதுக்குச் செல்வது பற்றி பின்வரும் ஹதீஸ்கள் தெளிவுபடுத்துகின்றன:

'உங்கள் பெண்களை மஸ்ஜித்களை விட்டும் நீங்கள் தடுக்காதீர்கள். அவர்களுடைய வீடுகள் அவர்களுக்கு மிகச் சிறந்தவையாகும்' என நபி (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறியதாக இப்னு உமர் (ரழியல்லாஹு அன்ஹுமா) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.  (நூல்: ஸுனனு அபீ தாவூத், ஹதீஸ் எண்: 567)

ஆயிஷா (ரழியல்லாஹு அன்ஹா) அவர்கள் கூறுகின்றார்கள்: அல்லாஹ்வின் தூதர்  (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் பெண்கள் உண்டாக்கியுள்ளவற்றை கண்டிருப்பார்களேயானால், பனூ இஸ்ராயீல் பெண்கள் தடுக்கப்பட்டதைப் போன்று அவர்களை அவர்கள் (மஸ்ஜித்களை விட்டும்) தடுத்திருப்பார்கள். (நூல்: சஹீஹுல் புகாரி: ஹதீஸ் எண்: 869)

மேற்கூறப்பட்ட ஹதீஸ்கள் மூலம் பெண்களை மஸ்ஜித்களுக்கு அனுப்புவதைத் தவிர்த்துக்கொள்வது ஏற்றமானது எனத் தெரியவருகின்றது. தற்காலத்தில் பொதுவாக பெண்கள் பாதைகளில் நடமாடுவதற்குரிய பாதுகாப்பான சூழல் காணப்படாமையாலும், மஸ்ஜித்களில் ஆண் பெண் கலப்பு ஏற்பட்டு அதன் மூலம் பல பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புக்கள் இருப்பதாலும், குறிப்பாக கண்டி ஜாவா மஸ்ஜித் நகர்ப்புற சூழலில் அமைந்திருப்பதால் பெண்களுக்கு 

பாதுகாப்பு இல்லாதிருப்பதாலும் இம்மஸ்ஜிதில் பெண்களுக்கு தராவீஹ் தொழுகை நடத்துவதைத் தவிர்ந்துகொள்வதோடு பெண்களுக்கென தனியான பொருத்தமான ஒரு இடத்தை ஏற்பாடு செய்வது சிறந்தது என கருதுகின்றோம்.

அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்.

வஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹ்.