Subject : இரவில் தூங்காமல் தஹஜ்ஜுத் தொழுதல்

FATWA # 012/F/ACJU/2009

ஆக 04, 2018

வெளியிடப்பட்ட

தொழுகை

இரவில் தூங்காமல் தஹஜ்ஜுத் தொழ முடியுமா என வினவி 2007.10.17 ஆம் திகதியிட்டு தங்களால் அனுப்பிவைக்கப்பட்ட கடிதம் இத்தால் தொடர்பு கொள்ளப்படுகின்றது.

எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே. சலாத்தும், ஸலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மீதும், அவர்களின் கிளையார்கள், தோழர்கள் மீதும் உண்டாவதாக!

தஹஜ்ஜுத் இரவுத் தொழுகைகளில் மிக முக்கியமான ஒன்றாகும். அல்லாஹ் அல்-குர்ஆனில் அதைப் பற்றி பின்வருமாறு குறிப்பிடுகின்றான்:

'நீர் உமக்கு உபரியாக குர்ஆன் ஓதுவதைக் கொண்டு இரவில் 'தஹஜ்ஜுத்' தொழுகையை நிறைவேற்றுவீராக!  மிக்க புகழ் பெற்ற இடத்தில் உம்மை உமதிரட்சகன் எழுப்பப் போதுமானவன்.'   (பனூ இஸ்ராயீல்: 79)

இரவு நேரத் தொழுகையாகிய தஹஜ்ஜுதை தூங்கி எழுந்த பின்புதான் தொழ வேண்டும் என்பதைக் கட்டாயப்படுத்ததுவதற்கான ஆதாரங்கள் இருப்பதாகத் தெரியவில்லை. எனவே தஹஜ்ஜுத் தொழுவதற்கு தூங்குவது நிபந்தனையல்ல என்றே தோன்றுகின்றது. எனினும்  தஹஜ்ஜுத் என்ற அரபு வார்த்தைக்கு பல அறிஞர்கள் தூங்கிய பின் எழுவது என விளக்கம் கூறியிருப்பதாலும், நபியவர்கள் தூங்கி எழுந்த பின் இரவுத் தொழுகையில் ஈடுபட்டார்கள் என்பது பரவலாக ஹதீஸ்களில் காணப்படுவதாலும் தஹஜ்ஜுத் தொழுகையை தூங்கி எழுந்தபின் நிறைவேற்றுவதே சிறந்ததாகும்.

வல்ல அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்.

வஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹ்.