எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே. சலாத்தும், ஸலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மீதும், அவர்களது கிளையார்கள், தோழர்கள் மீதும் உண்டாவதாக!
ஸக்காத்தைப் பெறுவதற்கு தகுதி உடையவர்கள் பற்றி அல் குர்ஆன் பின்வருமாறு குறிப்பிடுகின்றது:
'(ஸக்காத் என்னும்) தானங்கள் ஃபக்கீர்களுக்கும், மிஸ்கீன்களுக்கும், அதன் உத்தியோகத்தர்களுக்கும், இஸ்லாத்தின்பால் இணக்கமானோருக்கும், அடிமைகளை விடுதலை செய்வதற்கும், கடனில் மூழ்கியவர்களுக்கும், அல்லாஹ்வுடைய பாதையில் போராடுவதற்கும், வழிப்போக்கர்களுக்கும் (உரித்தானதாக) அல்லாஹ் ஏற்படுத்திய கடமையாகும். அல்லாஹ் மிக்க அறிந்தோனும், ஞானமுடையோனுமாயிருக்கிறான்'. (09:60)
ஸக்காத் பெறுவதற்குத் தகுதியானவர்களான ஃபக்கீர், மிஸ்கீன், கடனாளி போன்ற பிரிவினரில்; நீங்கள் அடங்குவீர்களாயின் ஸக்காத்தைப் பெற்றுக்கொள்ளலாம். அதில் தடைகள் கிடையாது
அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்.
வஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹ்.