Subject : ஸக்காத் பெறத் தகுதி உடையவர்களுக்கு தொழில் வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்தல்

FATWA # 016/ACJU/F/2006

ஆக 02, 2019

வெளியிடப்பட்ட

ஸக்காத் - ஸதகா

ஸக்காத் பெறத் தகுதி உடையவர்களுக்கு தொழில் வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்தல் சம்பந்தமாக ஃபத்வாக் கோரி தங்களால் அனுப்பப்பட்ட 2004.10.27 தேதியிடப்பட்ட கடிதம் இத்தால் தொடர்புகொள்ளப்படுகிறது.

எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே. சலாத்தும், ஸலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மீதும், அவர்களது கிளையார்கள், தோழர்கள் மீதும் உண்டாவதாக!

ஸக்காத் பெறத் தகுதி உடையவர்களுக்கு, அவர்களுக்குரிய ஸக்காத் நிதியில் இருந்து அவர்களது விருப்பத்திற்கிணங்க, அவர்கள் நிரந்தர பயன் அடையும் பொருட்டு, அவர்கள் செய்து வரும் வழமையான அல்லது பரிச்சயமான ஒரு தொழில் வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுக்கலாம்.

அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்.

வஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹ்.