Subject : ஸக்காத் கொடுக்கத் தகுதியான கடனாளி மீது ஸக்காத் கடமையாகுமா?

FATWA # 018/ACJU/F/2006

ஆக 02, 2019

வெளியிடப்பட்ட

ஸக்காத் - ஸதகா

ஸக்காத் கொடுக்கத் தகுதியான கடனாளி மீது ஸக்காத் கடமையாகுமா சம்பந்தமாக ஃபத்வாக் கோரி தங்களால் அனுப்பப்பட்ட 2004.10.27 தேதியிடப்பட்ட கடிதம் இத்தால் தொடர்புகொள்ளப்படுகிறது.

எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே. சலாத்தும், ஸலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மீதும், அவர்களது கிளையார்கள், தோழர்கள் மீதும் உண்டாவதாக!

கடன் இரு வகைப்படும்:

  1. தனது முதலீட்டை மென்மேலும் வளர்த்துக் கொள்வதற்காக பெறப்பட்ட கடன். இத்தகைய கடனைப் பெற்ற கடனாளி மீது ஸக்காத் கடமையாகும். இக்கடன் ஸக்காத்தை நிறைவேற்றுவதைத் தடுக்கமாட்டாது என்பதுவே மிகவும் உறுதியான கருத்தாகும்.
  2. தனது அன்றாடத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காகப் பெற்ற கடன். இத்தகைய கடனாளி மீது ஸக்காத் கடமையாகமாட்டாது.

அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்.

வஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹ்.