எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே. சலாத்தும், ஸலாமும் இறுதித் தூதர் முஹம்மத் (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மீதும், அவர்களது கிளையார்கள், தோழர்கள் மீதும் உண்டாவதாக!
அலங்காரத்திற்காக பெண்கள் மோதிரம் அணிவது இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அவர்கள் கை விரல்களில் ஏதேனும் குறிப்பிட்ட விரல்களில் மோதிரம் அணியக்கூடாது எனத் தடுக்கப்பட்டதற்கான எந்த ஆதாரத்தையும் நாம் காணவில்லை. நபி (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் அலி (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களுக்கு நடுவிரல், சுட்டுவிரல்களில் மோதிரம் அணியக்கூடாதெனக் கூறிய ஹதீஸ் சஹீஹு முஸ்லிமில் பதிவாகியுள்ளது. (ஹதீஸ் இலக்கம்: 1659). இது ஆண்கள் விடயத்தில் கூறப்பட்டதென்ற கருத்தை இமாம் நவவி (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் விளக்கியுள்ளார்கள்.
எனவே, பெண்கள் தமது சகல விரல்களிலும் மோதிரம் அணியலாம். இதில் கண்ணியமிக்க இமாம்கள் கருத்து வேறுபாடு கொண்டதாக நாம் அறியவில்லை.
அல்லாஹ் மிக அறிந்தவன்.
வஸ்ஸலாமு அலைக்கி வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹ்.