எமது பிரதேசத்தில் சேனை பயிர்ச் செய்கை மூலம் சோளத் தானியம் வருடாந்தம் அறுவடை செய்யப்படுகிறது. ஆயினும் அதற்கான ஜகாத் சம்பந்தப்பட்ட விடயத்தில் எமக்கு முழுமையான தெளிவு இன்iமையால் பல சிறமங்களுக்கு முகம் கொடுக்க நேறிடுகிறது.

ஆகவே சோளகத் தானியத்திற்கு ஸகாத் கடமையா? அதற்கான நிஸாப் எவ்வளவு? அதற்கான ஸகாத்தை எப்பொழுது,எவ்வாறு கணக்கிடுவது?...என்பன போன்ற சகல விடயங்களையும் தெளிவாக அறியத்தருமாறு தயவாய் வேண்டுகிறேன்.

பதில் : எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கேளூ ஸலாத்தும் ஸலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும் அவர்கள் கிளையார்கள், தோழர்கள் மீதும் உண்டாவதாக!

 

 ஸக்காத் விதியாகும் பொருட்களில் தானியங்கள் ஒன்றாகும்;. இது சம்பந்தமாக பின்வரும்  அல்-குர்ஆன் வசனம் தெளிவுபடுத்திகரது:

 

وَاٰتُوْا حَقَّهٗ يَوْمَ حَصَادِهٖ‌‌ ‏ (6:141)

 

அவற்றை அறுவடை செய்யும் காலத்தில் அதற்குரிய (கடமையான) பாகத்தைக் கொடுத்து விடுங்கள். (ஸூரதுல் அன்ஆம் 6:141 ) 

 

அவைகளில் சேமித்து வைக்க முடியுமான உணவாக உட்கொள்ள முடியுமான அரிசி, கோதுமை, குரக்கன் போன்றவைகளிலே ஸக்காத் கடமையாகும்.

 

அந்த வகையில் சோளம் உணவாக உட்கொள்ள முடியுமான தானியமாக இருப்பதனாலும் சேமித்து வைக்க முடியுமாக இருப்பதனாலும் அதனை ஸக்காத் விதியாகும் பொருட்களில் ஒன்றாகவே கனிக்கப்படும்.[1]

 

இமாம் இப்னு ஹஜர் அல் ஹைதமி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் ஸகாத் விதியாக்கப்பட்ட தானியங்களை பட்டியலிடும் பொது சோளத்தையும் குறிப்பிட்டிருக்கிரார்கள்.[2]  

 

சோளம் மற்றும் ஸகாத் விதியாக்கப்பட்ட ஏனைய தானியங்களுக்கு ஸகாத் கொடுக்கும் போது பின்வரும் விடயங்களைக் கவனத்தில் கொள்வது அவசியமாகும்.

 

  1. நீர் பாய்ச்சுவதற்கான செலவுகள் எதுவுமின்றி, மழை நீர் மூலம் விளைந்து அறுவடை செய்யப்பட்டதாக அவ்விளைச்சல் இருந்தால் முழு விளைச்சலிலிருந்தும் பத்தில் ஒரு பங்கு (1ஃ10) ஸகாத் கொடுத்தல் வேண்டும்.

 

  1. பணம் செலுத்தி நீர் பாய்ச்சி அறுவடை செய்ததாக இருந்தால் இருபதில் ஒரு பங்கு (1ஃ20) ஸகாத் கொடுத்தல் வேண்டும்.

 

இதற்குப் பின்வரும் ஹதீஸ் சான்றாகும்.

 

عَنْ سَالِمِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ أَبِيهِ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: (فِيمَا سَقَتِ السَّمَاءُ وَالعُيُونُ أَوْ كَانَ عَثَرِيًّا العُشْرُ، وَمَا سُقِيَ بِالنَّضْحِ نِصْفُ العُشْرِ) رواه البخاري. ١٤٨٣

 

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹுமா அவர்கள் அறிவிக்கிறார்கள்: மழை நீராலோ, ஊற்று நீராலோ, தானாகப் பாயும் தண்ணீராலோ விளைபவற்றில் பத்தில் ஒரு பங்கு ஸகாத் உண்டு. ஏற்றம்[3]  கமலை[4]  கொண்டு தண்ணீர் பாய்ச்சப்பட்டால் இருபதில் ஒரு பங்கு ஸகாத் கொடுக்க வேண்டும். (நூல் : புகாரி, 1483)

 

பொதுவாக தானியத்தில் ஸகாத் கடமையாகும் ஆகக் குறைந்த அளவு 5 வஸக்குகளாகும்.[5]  1 வஸக் என்பது 60 'ஸாஃ' ஆகும். 1 'ஸாஃ' என்பது 4 'முத்'  ஆகும். ஒரு 'முத்'  என்பது ஒருவரது இரு உள்ளங்கைகளால் நிறைத்து அள்ளப்படும் ஒரு அள்ளைக் குறிக்கும்.

 

ஒரு அள்ளின் சரியான நிறுவை அளவினை மட்டிடுவது சிரமமான காரியமாகும். எனினும், நவீன கால மார்க்க சட்ட அறிஞர்கள் 'ஸாஃ' எனும் அளவினை சர்வதேச (எஸ்.ஐ.) அளவுத் திட்டத்தின் அடிப்டையில் நிறுவை அளவுடன் ஒப்பிட்டு அதனை 2,400 கிராம் (2.4 கிலோ கிராம்) என்று தீர்மானித்துள்ளனர்.

 

இவ்வடிப்படையில் சோளதில் ஸக்காத் கடமையாகுவதற்கான அளவு 720 கிலோ கிராம்களாகும். (அதாவது சோளத்தின் இலையும் அதன் மட்டையும் நீக்கப்பட்டு வித்து மாத்திரம் நிறுக்கப்படல் வேண்டும்)[6]

 

சோளத்திற்கு ஸக்காத் கொடுக்கும் பொது அறுவடை செய்யும் சந்தர்பத்தில் கிடைக்கப் பெறும் அனைத்து சொளகத்தையும்  நிறுத்து ஸகாதின் அளவை நிர்னயம் செய்ய வேண்டும்;. பயிர் செய்யும் வேளையில் ஏற்படும் செலவினத்தையோ, கிருமி நாசினி மற்றும் பசளைகளின் கொள்வனவையோ, அல்லது அறுவடை செய்தல் போன்ற தேவைகளுக்கான செலவுகளையோ கழித்து ஸகாத்தின் அளவை கனிக்க முடியாது.

 

இது பற்றி இமாம் நவவி றஹிமஹுல்லாஹ் பின்வருமாறு கூறுகின்றார்கள் :

 

பேரீத்தம் பழத்தைக் காயவைத்தல், அறுவடை செய்தல், தானியத்தை சுமத்தல், சூடடித்தல், தூசி நீக்குதல், மேலும் களஞ்சியப்பத்தல் போன்ற செலவுகள் உரிமையாளரின் செலவிலிருந்தே கொடுக்கப் படல் வேண்டும். ஸகாத் பணத்திலிருந்து அவை கழிக்கப்படமாட்டாது என்ற விடயத்தில் எந்தவித கருத்து வேறுபாடும் இல்லை.[7]

 

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களது காலத்தில், இது போன்ற செலவுகள் இருந்தும் ஸகாத்தின் அளவில் நீர் பாய்ச்சுவதற்கு ஏற்படும் செலவீனம் மாத்திரமே ஹதீஸில் குறிப்பிட்டுள்ளது.

 

எல்லாம் வல்ல அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்.

 

 

அஷ்-ஷைக் எம்.எல்.எம் இல்யாஸ்               

செயலாளர், பத்வாக் குழு                          

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா           

      

அஷ்-ஷைக் ஐ. எல். எம். ஹாஷிம் சூரி

மேற்பார்வையாளர் - பத்வாப் பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித்  

பொதுச் செயலாளர்,

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

அஷ்-ஷைக் முஃப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி

தலைவர்,           

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா 

 

 

[1]  (بابُ زَكاةِ النَّباتِ) أيْ: النّابِتِ، وهُوَ إمّا شَجَرٌ، وهُوَ عَلى الأشْهَرِ ما لَهُ ساقٌ وإمّا نَجْمٌ، وهُوَ ما لا ساقَ لَهُ كالزَّرْعِ والأصْلُ فِيهِ الكِتابُ والسُّنَّةُ والإجْماعُ (تَخْتَصُّ بِالقُوتِ)، وهُوَ ما يَقُومُ بِهِ البَدَنُ غالِبًا؛ لِأنَّ الِاقْتِياتَ ضَرُورِيٌّ لِلْحَياةِ فَأوْجَبَ الشّارِعُ مِنهُ شَيْئًا لِأرْبابِ الضَّرُوراتِ بِخِلافِ ما يُؤْكَلُ تَنَعُّمًا أوْ تَأدُّمًا مَثَلًا كَما يَأْتِي (وهُوَ مِن الثِّمارِ الرُّطَبُ والعِنَبُ) إجْماعًا (ومِن الحَبِّ الحِنْطَةُ والشَّعِيرُ والأرُزُّ) بِفَتْحٍ فَضَمٍّ فَتَشْدِيدٍ فِي أشْهَرِ اللُّغاتِ (والعَدَسُ وسائِرُ المُقْتاتِ اخْتِيارًا)، ولَوْ نادِرًا كالحِمَّصِ والبَسْلاءِ والباقِلاءِ والذُّرَةِ والدُّخْن.  ( تحفة المحتاج في شرح المنهاج  كتاب الزكاة  باب زكاة النبات)

 

[2]   (بابُ زَكاةِ النَّباتِ….. (وهُوَ مِن الثِّمارِ الرُّطَبُ والعِنَبُ) إجْماعًا (ومِن الحَبِّ الحِنْطَةُ والشَّعِيرُ والأرُزُّ) بِفَتْحٍ فَضَمٍّ فَتَشْدِيدٍ فِي أشْهَرِ اللُّغاتِ (والعَدَسُ وسائِرُ المُقْتاتِ اخْتِيارًا)، ولَوْ نادِرًا كالحِمَّصِ والبَسْلاءِ والباقِلاءِ والذُّرَةِ والدُّخْن      ( تحفة المحتاج في شرح المنهاج  كتاب الزكاة  باب زكاة النبات)

 

[3]  கிணறு போன்ற நீர்நிலைகளின் அருகில் நீளமான கம்பு ஒன்றை நட்டு அதன் கவைப் பகுதியில் உள்ள சுழல் கட்டையோடு குறுக்குவாட்டில் ஒரு கட்டையைப் பொருத்தி அதில் நீர் பாய்ச்சுவதற்கான சால் பொருத்தப்பட்ட அமைப்பு. (க்ரியாவின் அகராதி)

 

[4] பெரிய தகரத் தவலை போன்றதும் அடிப்பகுதியில் நீண்ட தோல் பை இணைக்கப்பட்டதும் மாட்டின் உதவியால் கிணற்றிலிருந்து நீர் இறைக்கப் பயன்படுவதுமான ஒரு விவசாயத் தொழில் சாதனம். (க்ரியாவின் அகராதி)

 

[5]  عن أبي سعيد الْخُدْرِي -رضي الله عنه- قال: قال رسول الله -صلى الله عليه وسلم-:  ليسَ فِيما أَقَلُّ مِن خَمْسَةِ أَوْسُقٍ صَدَقَةٌ، ولَا في أَقَلَّ مِن خَمْسَةٍ مِنَ الإبِلِ الذَّوْدِ صَدَقَةٌ، ولَا في أَقَلَّ مِن خَمْسِ أَوَاقٍ مِنَ الوَرِقِ صَدَقَةٌ. (صحيح البخاري  1484)

 

[6]  ( و ) يعتبر ( الحب ) أي : بلوغه نصابا حال كونه ( مصفى من ) نحو ( تبنه ) وقشر لا يؤكل... وخَرَجَ بِلا يُؤْكَلُ مَعَهُ الذُّرَةُ فَيَدْخُلُ قِشْرُهُ فِي الحِسابِ؛ لِأنَّهُ يُؤْكَلُ مَعَهُ وتَنْحِيَتُهُ عَنْهُ نادِرَةٌ كَتَقْشِيرِ الحِنْطَةِ، (تحفة المحتاج في شرح المنهاج وحواشي الشرواني والعبادي ٣/‏٢٤٨ — ابن حجر الهيتمي (ت ٩٧٤) [كتاب الزكاة]←[باب زكاة النبات]

 

[7]  وقال النووي في المجموع: قال أصحابنا: ومؤونة تجفيف التمر وجذاذه وحصاد الحب وحمله ودياسه وتصفيته وحفظه وغير ذلك من مؤونة تكون كلها من خالص مال المالك لا يحتسب منها شيء من مال الزكاة بلا خلاف.