ஸக்காத் விதியாகும் பொருட்களுக்கு வருடாந்தம் ஸக்காத் கொடுக்க வேண்டுமா?

2006.06.14

செயலாளர்,
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா - கண்டி மாவட்டக் கிளை

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ

மேற்படி விடயம் சம்பந்தமாக ஃபத்வாக் கோரி தங்களால் அனுப்பப்பட்ட 2004.10.27 தேதியிடப்பட்ட கடிதம் இத்தால் தொடர்புகொள்ளப்படுகிறது.

எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே. சலாத்தும், ஸலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் ல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும், அவர்களது கிளையார்கள், தோழர்கள் மீதும் உண்டாவதாக!

தங்கம், வெள்ளி, கால் நடைகள், வியாபாரப் பொருட்கள் ஆகியவற்றில் ஸக்காத் கடமையாவதற்கு (12 அரபு மாதங்களைக் கொண்ட) ஒரு வருடம் பூர்த்தியடைதலும் ஒரு நிபந்தனையாகும். மேற்படி பொருட்களில் ஒவ்வொரு வருடமும் ஸக்காத் கடமையாகும்.

இதுவே நேர்வழி பெற்ற கலீஃபாக்கள், சஹாபிகளது பொதுவான நடைமுறையாகவும் இருந்து வந்துள்ளது.

எனவே, ஒவ்வொரு வருடமும் ஸக்காத் கொடுப்பது கடமையாகும். ஸக்காத் விதியாகும் ஒரு பொருளில் வாழ்நாளில் ஒரு முறை மாத்திரம் ஸக்காத் கொடுத்தல் போதுமானதாகாது.

அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்.

வஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ 

 

அஷ்-ஷைக். டப்ளியு..தீனுல் ஹஸன் 
செயலாளர், ஃபத்வாக் குழு 
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

அஷ்-ஷைக். எச்.அப்துல் நாஸர்

பொதுச் செயலாளர்,

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

அஷ்-ஷைக். எம்.ஐ.எம்.ரிஸ்வி (முஃப்தி)
தலைவர்,
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா