பிரிவு

இதை மதிப்பிடுங்கள்
(6 votes)
இத்தா என்பது ஒரு பெண் தனது கணவனின் மரணத்திலிருந்து அல்லது தலாக், குல்உ, பஸ்கு மூலம் கணவனைப் பிரிந்ததிலிருந்து மறுமணம் செய்யாமல் குறிப்பிட்ட சில காலங்கள் காத்திருப்பதாகும்.
இதை மதிப்பிடுங்கள்
(4 votes)
குல்உவுடைய இத்தாவும், தலாக்குடைய இத்தாவைப் போன்றே மூன்று சுத்தங்கள் பூர்த்தியாகுவதாகும். என்றாலும், குல்உ மூலம் பிரிந்த கணவன் மீண்டும் அப்பெண்ணுடன் குடும்ப வாழ்க்கை நடாத்த விரும்பினால் இத்தாவுடைய காலத்திலோ அல்லது இத்தாவுடைய காலத்தின் பின்னரோ வலீ, சாட்சி, மஹர் மூலம் புதிதாகத் திருமணம் செய்து கொள்ள வேண்டும்.
இதை மதிப்பிடுங்கள்
(3 votes)
ஒரு பெண் துப்பரவு காலத்தில்; மேற்கூறப்பட்ட ஏதாவதொரு முறையில் பிரிந்தால், அந்தத் துப்பரவு காலத்துடன் சேர்த்து அடுத்து வரும் இரண்டு துப்பரவு காலங்கள் நிறைவடைந்ததும் இத்தாவுடைய காலம் முடிந்து விடும். அதேவேளை மாதவிடாய் காலத்தில் பிரிந்தால் தொடர்ந்து மூன்று சுத்தங்கள் பூர்த்தியானதும் இத்தாவுடைய காலம் முடிந்து விடும்.
இதை மதிப்பிடுங்கள்
(1 Vote)
இத்தாவுடைய காலம் முடிவடைந்திருப்பின், புதிதாகத் திருமணம் செய்து சேர்ந்து வாழலாம். அவ்வாறு இத்தாவுடைய காலம் பூர்த்தி அடையாவிட்டால், உங்களை அவர் புதிதாகத் திருமணம் இன்றியே இத்தாவுடைய காலத்திற்குள் மீட்டெடுத்துக் கொண்டு திருமண வாழ்க்கையைத் தொடரலாம்.
இதை மதிப்பிடுங்கள்
(1 Vote)
'ஒரு முஸ்லிமான மனிதனின் சொத்து மன விருப்பத்துடன் அன்றி (மற்றவருக்கு) ஹலாலாகாது' (அறிவிப்பாளர்: அபூஹுர்ராஃ அல்-ருகாஷிய்யின் பெரிய தந்தை (ரழியல்லாஹு அன்ஹு) நூல்: முஸ்னத் அஹ்மத்)
இதை மதிப்பிடுங்கள்
(2 votes)
'ஒருவர் தனது மனைவியைத் தலாக் செய்வதாக (தலாக்கிற்கான) தெளிவான சொல்லின் மூலம் உள்ளத்தால் (தலாக் செய்வதை) நினைக்காத நிலையில் (வாயினால் மொழியாது) எழுதுவாராயின் தலாக் உண்டாக மாட்டாது.'