இஸ்லாமிய விழுமியங்கள் மற்றும் போதனைகளின் அடிப்படையில் வாழுகின்ற, தீனின் மேம்பாட்டிற்கும் சமூகத்தினதும் தேசத்தினதும் வளர்ச்சிக்கும் பங்களிப்புச் செய்கின்ற ஒரு கட்டுக்கோப்பான முன்மாதிரி முஸ்லிம் சமூகத்தை நோக்கி..
முஸ்லிம் சமூகத்தின் எல்லா தரப்பினரையும் இஸ்லாமிய போதனைகளின் அடிப்படையில் ஆன்மீக ரீதியாகவும் ஒழுக்க, பண்பாட்டு ரீதியாகவும் வழிகாட்டுவதும் சமூகத்தினதும் தேசத்தினதும் கல்வி, பொருளாதார, சமூக, கலாசார மேம்பாட்டுக்கு பங்களிப்புச் செய்வதும் சமூக ஒற்றுமையையும் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தையும் கட்டியெழுப்புதலும்.
1. சமூகத்தின் எல்லா தரப்பினரையும் இஸ்லாமிய போதனைகளின் அடிப்படையில் ஆன்மீக ரீதியாக வழிகாட்டுதல்.
2. நல்லொழுக்கமும் பண்பாடுமுள்ள தனிமனிதர்களும் குடும்பங்களும் உருவாக உழைத்தல்.
3. உலமாக்களினதும் இஸ்லாமிய கல்வியினதும் மேம்பாட்டிற்கு உழைத்தல்.
4. சமூகத்தினதும் நாட்டினதும் கல்வி, சமூக, பொருளாதார, கலாசார மேம்பாட்டிற்குப் பங்களிப்புச் செய்தல்.
சமூக ஒற்றுமைக்காக உழைத்தல்.
5. இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை கட்டியெழுப்புதல்.
6. ஜம்இய்யாவின் நோக்கங்களை அடைவதற்கு தேவையான எல்லாச் செயல்களையும் கருமங்களையும் செய்தல்.
1. இஸ்லாமிய அடிப்படையிலானவை
2. தேசியம்
3. நடுநிலை போக்கு
4. இணக்கப்பாடு
5. பன்மைத்துவம்